For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே அடுத்த கேப்டன் நான் தான்.. ஒரே ஒரு ட்வீட்டால் மாட்டிக்கொண்ட ஜடேஜா.. வச்சு செய்யும் ரசிகர்கள்

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த கேப்டன் யார் என்ற விவகாரம் சென்று வரும் நிலையில் ஜடேஜா பெயரை உள்நுழைத்துள்ளார் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன்.

சென்னை அணியின் கேப்டனாக தோனி 200 போட்டிகளுக்கும் மேலாக வழிநடத்தி வெற்றியும் பெற்றுக் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் யார் என்ற பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. இதில் ஜடேஜாவின் பெயர் அடிபட்டுள்ளது.

ஐபிஎல்: டூப்ளசிஸ் முதல் சாம் கரண் வரை இல்லை? சிஎஸ்கேவுக்கு வந்த சிக்கல்.. எப்படி சமாளிப்பார் தோனி? ஐபிஎல்: டூப்ளசிஸ் முதல் சாம் கரண் வரை இல்லை? சிஎஸ்கேவுக்கு வந்த சிக்கல்.. எப்படி சமாளிப்பார் தோனி?

தோனி

தோனி

சென்னை அணிக்கு கடந்த 2008ம் ஆண்டு முதல் எம்.எஸ்.தோனி செயல்பட்டு வருகிறார். இதுவரை 200 போட்டிகளில் அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள அவர் 110 போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார். இதுவரை 3 முறை ஐபிஎல் கோப்பைகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.

ஓய்வு எப்போது?

ஓய்வு எப்போது?

கடந்தாண்டு சர்வதேச தொடர்களில் இருந்து ஓய்வு பெற்ற அவர், ஐபிஎல் போட்டிகளிலும் பேட்டிங்கில் திணறி வருகிறார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட போது, தோனியின் அதிரடியை காண முடியவில்லை. இதனால் அவர் இந்தாண்டு ஓய்வு அறிவிப்பார் என கூறப்பட்டது.

ஓய்வு எப்போது?

ஓய்வு எப்போது?

இந்த விவகாரத்தில் சிஎஸ்கே தரப்பில் இருந்து தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால் ஓய்வு பெறவேண்டிய கட்டாயத்திற்கு தோனி தள்ளப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளிலும் பேட்டிங்கில் திணறி வருகிறார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட போது, தோனியின் அதிரடியை காண முடியவில்லை. எனவே இந்தாண்டு நிச்சயம் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த கேப்டன் யார் என்ற விவாதமும் எழத் தொடங்கியுள்ளது.

ஆசைப்படும் ஜடேஜா

ஆசைப்படும் ஜடேஜா

இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஜடேஜா தலையிட்டுள்ளார். ட்விட்டரில் அவரிடம் சிஎஸ்கேவின் அடுத்த கேப்டனாக இருக்க யாரை நீங்கள் தேர்வு செய்வீர்கள் என ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஜடேஜா '8' என ரிப்ளை செய்திருந்தார். எட்டாம் எண்ணானது சிஎஸ்கே அணியில் ஜடேஜா அணிந்திருக்கும் ஜெர்ஸியின் நம்பராகும். எனவே ஜடேஜா தான் அடுத்த கேப்டனாக இருக்க ஆசைப்படுவதாக தெரிகிறது.

பம்மிய ஜடேஜா

பம்மிய ஜடேஜா

ஆனால் சிறிது நேரத்திலேயே ஜடேஜா அந்த ட்வீட்டை நீக்கி விட்டார். எனினும் பல்வேறு ரசிகர்கள் அவரின் பதிவை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 2022-ம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும். அதில் 3 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர் அடங்குவர். சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை, எம்.எஸ்.தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் முதல் தேர்வாகவும், அயல்நாட்டு வீரர்களில் டூப்ளசிஸ் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

Story first published: Wednesday, September 15, 2021, 22:09 [IST]
Other articles published on Sep 15, 2021
English summary
Ravindra Jadeja expresses his feelings on leading CSK after MS Dhoni
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X