For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முக்கிய போட்டியில் இப்படி ஒரு முடிவா.. அதிர்ச்சி கொடுத்த ஆர்சிபி-கேகேஆர்.. முன்னாள் வீரர்களே வியப்பு

அமீரகம்: எலிமினேட்டர் சுற்று போட்டியில் ரசிகர்கள் மற்றும் கமெண்ட்டேட்டர்ஸ் அனைவருக்கும் ஆச்சரியம் தரக்கூடிய நிகழ்வு நடந்துள்ளது.

ஐபிஎல் 14ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

T20 World Cup: 3 முக்கிய முடிவுகள் தயார்.. பொறுமை இழந்த பிசிசிஐ.. அவசர அவசரமாக நடந்த ஆலோசனை! T20 World Cup: 3 முக்கிய முடிவுகள் தயார்.. பொறுமை இழந்த பிசிசிஐ.. அவசர அவசரமாக நடந்த ஆலோசனை!

இந்நிலையில், இன்று எலிமினேஷன் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

எலிமினேட்ட போட்டி

எலிமினேட்ட போட்டி

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, அடுத்து புதன் கிழமை டெல்லி கேபிடல்ஸை எதிர்கொள்ளும். அதில் வெற்றிபெறும் அணி வெள்ளிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும். இதனால், இன்றைய ஆர்சிபி, கொல்கத்தா ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பார்க்காத முடிவு

எதிர்பார்க்காத முடிவு

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. பிட்ச்-சானது பேட்டிங்கிற்கு நல்ல சாதகமாக இருப்பதால் முதலில் நல்ல ஸ்கோரை அடித்துவிட்டு, எதிரணியை பிரஷரின் மூலம் சுருட்ட ஆர்சிபி அணி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத அணி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஆர்சிபி - கொல்கத்தா இரு அணிகளுமே அணியில் எந்த மாற்றமும் இன்றி பழைய வீரர்கள் மீதே நம்பிக்கை வைத்து களமிறங்குகிறது.

பெங்களூரு அணி பலம்

பெங்களூரு அணி பலம்

ஆர்சிபி அணியை பொறுத்தவரை கோலி - தேவ்தத் பட்டிக்கல் சிறப்பான தொடக்கம் கொடுத்து வருகின்றனர். மிடில் ஆர்டரில் மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் தான் நம்பிக்கை தந்துவந்த நிலையில் தற்போது ஸ்ரீகர் பரத்தும் முழு ஃபார்மில் இருக்கிறார். ஆர்சிபி அணி கடந்த போட்டியில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் அவர். இதே போல பந்துவீச்சில் டேன் கிறிஸ்டியன், சபாஷ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுவேந்திர சாஹல் என மிகவும் பலமாக உள்ளது.

கேகேஆர் அணி

கேகேஆர் அணி

கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் ஓப்பனிங் சுப்மன் கில் - வெங்கடேஷ் ஐயர் ஜோடி பிரிக்க முடியாத இணையாக மாறி வருகிறது. மிடில் ஆர்டரில் ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் நம்பிக்கை கொடுக்கின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரையில் சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, ஃபெர்க்யூசன், ஷிவம் மாவி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

Story first published: Monday, October 11, 2021, 20:02 [IST]
Other articles published on Oct 11, 2021
English summary
RCB and KKR shows their trust in their players, Doesn't change the Playing 11 for Eliminator Round
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X