For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்கெட்ச் ஜடேஜாவுக்கு இல்லப்பா.. அந்த 2 வீரருக்கு தான்.. ஹர்ஷலை வைத்து புது கணக்கு போட்டுள்ள கோலி!

சார்ஜா: சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவை தான் ஹர்ஷல் பட்டேல் பழிவாங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்கெட்ச் மாறியுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளதால் இதில் மீள வேண்டிய கட்டாயம் உள்ளது.

'இன்று சரவெடி உறுதி’.. சிஎஸ்கே - ஆர்சிபி போட்டிக்கு தரமான பிட்ச்.. ஆனால் அதிக ஸ்கோர் வருவது சந்தேகமே'இன்று சரவெடி உறுதி’.. சிஎஸ்கே - ஆர்சிபி போட்டிக்கு தரமான பிட்ச்.. ஆனால் அதிக ஸ்கோர் வருவது சந்தேகமே

பழித்தீர்க்குமா ஆர்சிபி

பழித்தீர்க்குமா ஆர்சிபி

இது ஒருபுறம் இருந்தாலும், சிஎஸ்கேவை பழிவாங்க வேண்டிய திட்டத்திலும் ஆர்சிபி முணைப்புட உள்ளது. இந்த தொடரில் இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கேவிடம் ஆர்சிபி மோசமான தோல்வியை தழுவியிருந்தது. கடைசி ஓவர் வரை வெற்றி பெரும் நம்பிக்கையுடன் இருந்த ஆர்சிபி, 20 ஓவரில் சொதப்பியது.

ஜடேஜாவின் அதிரடி

ஜடேஜாவின் அதிரடி

இந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்தவராக திகழ்ந்த ஹர்ஷல் படேலின் கடைசி ஓவரை ஜடேஜா மரண காட்டு காட்டினார். ஹர்ஷல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் ஜடேஜா 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி, ஒரு இரட்டை ஓட்டம் என மொத்தம் 37 ரன்களை குவித்தார். இந்த ஓவர் தான் ஆட்டத்தையே புரட்டிப்போட்டது. மொத்தம் 28 பந்துகளை சந்தித்த ஜடேஜா 62 ரன்களை விளாசி நாட் அவுட்டாக இருந்தார். இதனால் சிஎஸ்கே அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனை எட்டிப்பிடிக்க முடியாத ஆர்சிபி 122 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

Recommended Video

DC vs SRH Delhi Capitals On Top In Chase Of 135 Runs Vs SRH | Oneindia Tamil
ஆர்சிபியின் திட்டம்

ஆர்சிபியின் திட்டம்

எனவே தனது ஓவரில் அதிரடி காட்டிய ஜடேஜாவை நிச்சயம் ஹர்ஷல் படேல் பழிவாங்குவார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஹர்ஷல் படேலை வைத்து ஆர்சிபி போட்டு வைத்துள்ள திட்டமே வேறு வீரர்களுக்காக உள்ளது. அதாவது டூப்ளசிஸ் மற்றும் அம்பத்தி ராயுடுவை வீழ்த்துவதற்காக ஸ்பெஷலாக

ஹர்ஷல் படேல் கொண்டு வரப்படவுள்ளார். இதற்கு காரணம் பழைய புள்ளிவிவரங்கள் தான்.

ரெக்கார்ட்கள்

ரெக்கார்ட்கள்

டூ பிளசிஸுக்கு எதிராக இதுவரை 13 பந்துகளை வீசியுள்ள ஹர்ஷல் படேல், இரண்டு முறை விக்கெட் எடுத்துள்ளார். அதேபோல், அம்பத்தி ராயுடுவுக்கு எதிராக 36 பந்துகள் வீசி 4 முறை விக்கெட் எடுத்திருக்கிறார். எனவே இன்றைய போட்டியிலும் அவர்கள் இருவருக்காக மட்டும் ஹர்ஷலை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Friday, September 24, 2021, 19:31 [IST]
Other articles published on Sep 24, 2021
English summary
IPL 2021: Jadeja is not a target, RCB Pacer Harshal Patel's plan in Match against CSK
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X