For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஒரு எமோஜிதான்....டோட்டல் டீமும் க்ளோஸ்..ட்விட்டரால் ஆடிப்போன ஆர்சிபி அணி...விளாசும் நெட்டிசன்ஸ்

சென்னை: ஐபிஎல் தொடருக்கான பணியில் ட்விட்டர் நிறுவனம் செய்துள்ள தவறு பெங்களுரூ அணியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதவுள்ளது.

ஹசல்வுட்டுக்கு மாற்றாக பேட்ஸ்மேனே தேவை...ஃபார்மில் இருக்கும் 3 வீரர்கள்.. டார்கெட் செய்யுமா சிஎஸ்கே ஹசல்வுட்டுக்கு மாற்றாக பேட்ஸ்மேனே தேவை...ஃபார்மில் இருக்கும் 3 வீரர்கள்.. டார்கெட் செய்யுமா சிஎஸ்கே

இந்நிலையில் இந்த போட்டிகாக ட்விட்டர் நிறுவனம் செய்த தவறால் ஆர்.சி.பி அணியை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

 ட்விட்டர்

ட்விட்டர்

கிரிக்கெட் ரசிகர்களிடையே ஐபிஎல் குறித்த காய்ச்சல் வந்துவிட்டது என்றே கூறலாம். வீரர்களின் பயிற்சி, அணிகளின் வியூகம் என ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை மேலும் சிறப்பானதாக மாற்றுவதற்காக ட்விட்டர் நிறுவனம் வருடம்தோறும் எமோஜியை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறது.

ட்விட்டரின் தவறு

ட்விட்டரின் தவறு

அந்தவகையில் இந்தாண்டும் ஒவ்வொரு அணிகளின் ஹேஷ்டேக்குகள் பக்கத்தில் அந்த அணியின் ஜெர்ஸி எமோஜி தோன்றுவதை ட்விட்டர் நிறுவனம் இன்று தொடங்கியது. ஆனால் அதில்தான் ஆர்.சி.பி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆர்.சி.பி அணியின் 3 ஹேஷ்டேக்குகளான #RCB, #PlayBold and #WeAreChallengers ஆகியவைக்கு பக்கத்தில் அந்த அணியின் ஜெர்ஸி எமோஜிக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸி எமோஜி தோன்றுகிறது.

நெட்டிசன்கள் கிண்டல்

நெட்டிசன்கள் கிண்டல்

இணையத்தில் ஒரு சிறிய தவறை பார்த்தால் கூட நெட்டிசன்கள் ட்ரோல்கள் அதிகளவில் இருக்கும். ஆனால் ஐபிஎல் தொடருக்கான எமோஜியில் தவறு இருந்தால் விட்டு வைப்பார்களா. உடனடியாக ட்விட்டர் நிறுவனத்தையும், அந்த எமோஜியை உருவாக்கியவரையும் குறித்து அதிகளவில் மீம்களையும் ட்ரோல் வீடியோக்களையும் பரப்பி வருகின்றனர்.

ஆர்.சி.பி ரியாக்‌ஷன்

ஆர்.சி.பி ரியாக்‌ஷன்

இதுகுறித்து ரியாக்ட் செய்துள்ள பெங்களூரு அணி தனது ட்விட்டர் பக்கத்தில் குசும்புத்தனமான பதிவு ஒன்றை செய்துள்ளது. அதில், ட்விட்டர் நிறுவனத்திற்கு சிறந்த தொழில்நுட்ப பொறியாளர் தேவைப்படுவது போல் தெரிகிறது. சிறந்த பொறியாளரை வேலைக்கு எடுக்க பெங்களூரு சிறந்த நகரம் என தெரிவித்துள்ளது. மேலும் #WhatswithyourEmojis என்ற ஹேஷ்டேக்கையும் போட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, இந்த எமோஜி தவறுக்கு கோலியின் ரியாக்‌ஷனை அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Story first published: Saturday, April 3, 2021, 17:25 [IST]
Other articles published on Apr 3, 2021
English summary
RCB playing in CSK's yellow? Netizens Trolls Twitter India for mistaking team jersey emoji
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X