14 வருடத்திற்கு முன் நடந்த அதே சம்பவம்... ஆர்சிபி போட்டியில் சுவாரஸ்ய நிகழ்வு.. தோனி தோனிதான்பா..!

சார்ஜா: 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் உள்ள ஒற்றுமைகள் குறித்து ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் 36வது போட்டியில் நேற்று சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது.

4 ஓவர்களில் ஆட்டம் மாறியது எப்படி.. தோனியின் ப்ளானுக்கு பின்னால் இருந்த பிராவோ.. முழு விளக்கம்! 4 ஓவர்களில் ஆட்டம் மாறியது எப்படி.. தோனியின் ப்ளானுக்கு பின்னால் இருந்த பிராவோ.. முழு விளக்கம்!

சிறப்பாக விளையாடி வந்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 156 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணி 18.1 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

இந்த போட்டியில் தோனியின் கேப்டன்சி திறன் அனைவரையும் வியக்கவைத்தது. 13 ஓவர்களில் 110 ரன்களை எடுத்திருந்த ஆர்சிபி அணி அதற்கு அடுத்ததாக மளமளவென விக்கெட்டுகளை விட்டது. குறிப்பாக கடைசி 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே வந்தது. வயசானாலும் இன்னும் அவரின் திட்டங்கள் கிரிக்கெட்டை ஆளுகிறது என்பதை போல நேற்று 4 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றி அமைத்தார். இதனால் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

வரலாற்று தினம்

வரலாற்று தினம்

இது ஒருபுறம் இருக்க நேற்றைய தினம் தோனிக்கும், தோனி ரசிகர்களுக்கும் வாழ்கையில் மறக்க முடியாத நாளாகும். ஆம்.. கடந்த 2007ம் ஆண்டு இதே நாளன்று தான் தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது. பரபரப்பின் உச்சிக்கே சென்ற இந்தப் போட்டியில் இந்திய அணியின் புதிய கேப்டன் தோனியின் வித்தியாசமான முடிவுகள் மற்றும் கேப்டன்சி திறமைகள் முன்னாள் வீரர்களுக்கு ஆச்சரியமளித்தது.

இறுதிப்போட்டி

இறுதிப்போட்டி

கடைசி ஒவரில் பாகிஸ்தான் வீரர் மிஸ்பா-உல்-ஹக் சில நிமிடங்கள் இந்திய ரசிகர்களின் இதயதுடிப்பை நிறுத்தி வைத்திருந்தார் என்றே கூறலாம். சிக்ஸர் செல்ல வேண்டிய பந்து ஒரு நிமிடத்தில் ஆட்டத்தையே மாற்றி அமைத்து இந்தியாவின் பக்கம் வெற்றி சென்றது. இதனால் முதல் முறையாக டி20 உலகக்கோப்பை வெற்றியும் கிடைத்தது.

ஒற்றுமை நிகழ்வு

ஒற்றுமை நிகழ்வு

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கும், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்கு சில சுவாரஸ்யமான ஒற்றுமைகள் உள்ளன. அதாவது டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோனி தலைமை தாங்கிய இந்திய அணி டார்கெட்டாக வைத்த ரன்கள் 157 ஆகும். அதில் வெற்றியும் கண்டது. அதே போல நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தோனி தலைமையில் விளையாடிய சிஎஸ்கே அணி 157 ரன்கள் எடுத்து வெற்றி கனியை ருசித்தது.

எதிர்பாராத பவுலிங்

எதிர்பாராத பவுலிங்

டி20 உலகக்கோப்பையில் ஆட்டத்தின் கடைசி வரை பாகிஸ்தான் அணியின் பக்கம் தான் வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் கடைசி ஓவரில் தோனி அனுபவம் இல்லாத பவுலருக்கு வாய்ப்பு கொடுத்து தேர்டுமேன் திசையில் நின்றிருந்த ஸ்ரீசாந்த் கையில் கேட்ச் பிடித்தார். அதே போல நேற்றைய போட்டியில் ஆர்சிபி முதல் இன்னிங்ஸில் ரன் மழை பொழிந்து வந்தது. முதல் விக்கெட்டிற்கே 110 ரன்களை சேர்த்திருந்தது. ஆனால் ஃபார்ம் அவுட் எனக்கூறப்பட்ட பிராவோவுக்கு வாய்ப்பு கொடுத்து ஆட்டத்தையே மாற்றி அமைத்தார். எனவே 14 வருடங்கள் கடந்த போதும் தோனியின் செயல்பாடுகள் மற்றும் கேப்டன்சி திட்டங்கள் இன்னும் வயசாகாமல் வொர்க் அவுட்டாகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 கணிப்புகள்
Match 8 - October 20 2021, 07:30 PM
இலங்கை
அயர்லாந்து
Predict Now
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
RCB vs CSK matche had some Interesting incidents that already happend in T20 Worldcup final!
Story first published: Saturday, September 25, 2021, 13:04 [IST]
Other articles published on Sep 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X