நல்லாதானே விளையாண்டாரு.. புது வீரரின் வருகையால் பிராவோவை ஒதுக்கிய சிஎஸ்கே.. காரணம் என்ன?

மும்பை: சென்னை அணியில் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோவுக்கு பதிலால லுங்கி நெகிடி சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

 லுங்கி நெகிடி சேர்ப்பு

லுங்கி நெகிடி சேர்ப்பு

சென்னை அணியில் ஓப்பனிங் பேட்டிங்கில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பவுலிங்கில் மட்டும் ஒரே ஒரு மாற்றமாக தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி நெகிடி கொண்டுவரப்பட்டுள்ளார். இவரை அணியில் சேர்ப்பதற்காக நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ நீக்கப்பட்டுள்ளார்.

வருகை தாமதம்

வருகை தாமதம்

தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நெகிடி சர்வதேச தொடரில் பங்கேற்றிருந்ததால் தாமதமாக சிஎஸ்கே அணியில் இணைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது குவாரண்டனை முடித்த அவர் இன்றைய போட்டியில் தான் களமிறக்கப்பட்டுள்ளார்.

என்ன காரணாம்

என்ன காரணாம்

இந்த சீசனில் இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ள சிஎஸ்கே பேட்டிங், சுழற்பந்துவீச்சில் நன்கு ஃபார்முக்கு வந்தாலும், வேகப்பந்துவீச்சில்தீபக் சஹார் மட்டும் சிறப்பாக செயல்பட்டார். சிஎஸ்கே அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்களாக மொயின் அலி, சாம் கரன் மற்றும் டூ பிளெசிஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தால் தங்களது இடத்தை உறுதி செய்துவிட்டார்கள்.

பிராவோ

பிராவோ

ஆனால் டுவைன் பிராவோ பவுலிங்கில் பெரிய அளவில் வாய்ப்பு பெறாமல் இதுவரை ஆடியுள்ள 3 போட்டிகளில் 3 விக்கெட்கள் எடுத்துள்ளார். பேட்டிங்கிலும் பெரிய வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. அதே போல சென்னை அணியிலும் தற்போது பேட்டிங்கிற்கு 7 வீரர்களை வைத்துள்ளதால் பந்துவீச்சை பலப்படுத்த பிராவோவை நீக்கிவிட்டு நெகிடியை சேர்த்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Reason behind CSK removes Bravo and Includes Lungu ngidi in Playing 11
Story first published: Wednesday, April 21, 2021, 20:44 [IST]
Other articles published on Apr 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X