For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி ஆட்டமே வேற.. பென் ஸ்டோக்ஸுக்கு மாற்று.. தென்னாப்பிரிக்க வீரரை களமிறக்க ராஜஸ்தான் அணி திட்டம்!

சென்னை: நடப்பு ஐபிஎல் தொடரில் மீண்டு வருவதற்காக தென்னாப்பிரிக்க அதிரடி வீரரை களமிறக்கும் பணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஈடுபட்டு வருகிறது.

ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். ஏற்கனவே ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகிய நிலையில் ஸ்டோக்ஸும் விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர்களின் விலகலால் ராஜஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பெரிய அளவில் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அந்த அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இனி இவர் தேறமாட்டார்... மீண்டும் மீண்டும் சொதப்பும் இளம் வீரர்.. கோபத்தில் முன்னாள் வீரர்கள்இனி இவர் தேறமாட்டார்... மீண்டும் மீண்டும் சொதப்பும் இளம் வீரர்.. கோபத்தில் முன்னாள் வீரர்கள்

பென் ஸ்டோஸ்க் காயம்

பென் ஸ்டோஸ்க் காயம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் பீல்டிங் செய்துகொண்டிருந்த பென் ஸ்டோக்ஸுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. காயத்தின் தன்மை மிகவும் பெரிதாக இருப்பதால், அவர் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது.

தென்னாப்பிரிக்க வீரர்

தென்னாப்பிரிக்க வீரர்

இந்நிலையில் இவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் ராஸி வான் டெர் டுசெனை அணியில் எடுக்க ராஜஸ்தான் அணி அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. பேச்சுவார்த்தை மட்டத்தில் இருப்பதாகவும், வான் டெர் டுசென் ஒப்புக்கொண்டால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஃபுல் ஃபார்ம்

ஃபுல் ஃபார்ம்

டுசென் தற்போது சிறந்த ஃபார்மில் உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 2 ஒருநாள் போட்டிகளில் 183 ரன்களை குவித்தார். இதில் ஒரு சதமும் அடங்கும். அதே போல 2 டி20 போட்டிகளில் ஆடி 183 ரன்களை விளாசியுள்ளார். இதனால் டி20 போட்டியில் இவரின் ஸ்ட்ரைக் ரேட் 153.57 என சிறப்பாக உள்ளது. ஆனால் அவருக்கு சமீப காலமாக காய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பாகிஸ்தான் தொடரில் கடைசி ஒரு நாள் போட்டியிலும், முதல் 2 டி20 போட்டிகளிலும் ஆடவில்லை.

எப்போது களம் காணுவார்

எப்போது களம் காணுவார்

ஒரு வேளை அவர் ஒப்புக்கொண்டால், முதலில் உடற்தகுதி சான்றிதழை பெறவேண்டும். அதன் பின்னர் இந்திய வருகை புரிந்து தனிப்படுத்தப்பட்டு ஐபிஎல்-ல் போட்டிகளில் விளையாட 2 வாரங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. இதே வேளையில் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு மாற்று வீரர் குறித்து எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

Story first published: Friday, April 23, 2021, 18:14 [IST]
Other articles published on Apr 23, 2021
English summary
Report says Rassie van der Dussen likely to Replace Ben Stokes for Rajasthan Royals
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X