For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடடா.. ஆரம்பமே அமர்க்களம்.. 5 நாட்களுக்கு "டபுள் ட்ரீட்" - ஐபிஎல் அப்டேட்

மும்பை: மீண்டும் தொடங்கப்படும் ஐபிஎல் தொடரின் தேதிகளில், சிறிய மாற்றமாக ஒரு லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்.19 அல்லது செப்டம்பர் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்றும், அக்டோபர் 10ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் ஸ்போர்ட்ஸ் டுடே நேற்றுமுன்தினம் செய்தி வெளியிட்டது.

திருந்தாத வங்கதேச வீரர்கள்.. முதன்முறை அல்ல.. அப்போதே திருந்தாத வங்கதேச வீரர்கள்.. முதன்முறை அல்ல.. அப்போதே

இத்தகவலை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளதாகவும், பிசிசிஐ அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்ததாகவும் விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜூம்தார் ஸ்போர்ட்ஸ் டுடே யூடியூப் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

செப்.18 அல்லது 19

செப்.18 அல்லது 19

எனினும், ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதிகளில் சிறிய மாற்றம் ஏற்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து ஏபிபி-யின் டெலிகிராஃப் தளம் வெளியிட்டுள்ள செய்தியில், "ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 18 அல்லது 19ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் டுடே செப்.19 அல்லது செப்.20 தொடங்கும் என்று கூறியிருந்த நிலையில், டெலிகிராஃப் செப்.18 அல்லது 19ம் தேதி தொடங்கும் என்று கூறியுள்ளது.

வீக் எண்ட் பார்ட்டி

வீக் எண்ட் பார்ட்டி

இதில், டெலிகிராஃப் ரிப்போர்ட் படி போட்டிகள் தொடங்கவே அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், செப்.18 சனிக்கிழமை. ஒருவேளை அன்றைய தினம் தொடங்கப்படலாம். அல்லது மறுநாளான செப்.20 ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்படலாம். நிறுத்தப்பட்ட தொடர், மீண்டும் தொடங்கும் போது, ரசிகர்களின் எதிர்பார்ப்பு பழையபடியே இருக்க வேண்டுமெனில், வார இறுதியில் தொடரை தொடங்குவது தான் சரியான முடிவாக இருக்கும் என்று பிசிசிஐ கருதுவதே அதன் காரணம் என்று கூறப்படுகிறது.

5 நாட்களுக்கு செம

5 நாட்களுக்கு செம

அதுமட்டுமன்றி, மீதமுள்ள 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படும் என்றும், 7 போட்டிகள் single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 5 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் இரண்டு போட்டிகள் நடைபெறும். அது வார இறுதியாகவும் இருக்கலாம். அல்லது வார நாட்களில் ஒன்றாகவும் இருக்கலாம். குறிப்பாக, வியாழக்கிழமையாக இருக்கலாம்.

சிக்கல் தடையின்றி

சிக்கல் தடையின்றி

இதுகுறித்த இறுதி அறிவிப்பு, நாளை மறுதினம் நடக்கவுள்ள SGM மீட்டிங்கில் முடிவு செய்யப்பட உள்ளது. அன்றைய தினமே பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் டெலிகிராஃப் தெரிவித்துள்ளது. ஸோ, மீண்டும் ஐபிஎல் தொடங்குவது ஏறக்குறைய உறுதி என்று கூறலாம். அதேசமயம், மீண்டும் அமீரகத்தில் போட்டி நடைபெறுவதால், கடந்த ஆண்டை போல இம்முறையும் எந்தவித சிக்கலும், தடையுமின்றி ஐபிஎல் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Thursday, May 27, 2021, 20:11 [IST]
Other articles published on May 27, 2021
English summary
IPL 2021 resumes 10 double header games allotted - ஐபிஎல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X