For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கண் இமைக்கும் நொடியில் நடந்த அந்த சம்பவம்.. வாய்ப்பிழக்க வைத்த இளம் வீரர்..ப்பா என்ன திறமை - வீடியோ

மும்பை: கண் இமைக்கும் நேரத்தில் ரிஷப் பண்ட்-க்கு நடந்த சம்பவம் டெல்லி அணியின் ஆட்டத்தையே மாற்றியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் ரியான் பராக் எடுத்த ரன் அவுட் ஆட்டத்தையே மாற்றி அமைத்தது.

யாருமே எதிர்பார்க்கல... கடைசி வரை பரபரப்பு.. ஷாக் கொடுத்த மோரிஸ்..ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி!யாருமே எதிர்பார்க்கல... கடைசி வரை பரபரப்பு.. ஷாக் கொடுத்த மோரிஸ்..ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி!

தொடக்கம் தடுமாற்றம்

தொடக்கம் தடுமாற்றம்

போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆடிய டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ப்ரித்வி ஷா 2 ரன்னிலும், தவான் 9 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இதனை அடுத்து வந்த ரஹானேவும் 8 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இதனால் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை டெல்லி அணி இழந்தது.

பண்ட் அதிரடி

பண்ட் அதிரடி

இக்கட்டான சூழலில் ஜோடி சேர்ந்த கேப்டன் ரிஷப் பண்ட் - லலித் யாதவ் கூட்டணி நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். குறிப்பாக ராகுல் திவேட்டியா வீசிய 11-வது ஓவரில், ரிஷப் பண்ட் 4 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இதனால் அணியின் ஸ்கோர் மலமலவென உயர்ந்து டெல்லி அணியின் ஸ்கோர் அதிகளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் எழுந்தது.

முக்கிய விக்கெட்

இந்நிலையில் ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் ஆட்டத்தை மாற்றி அமைத்தார். அவர் வீசிய 13-வது ஓவரின் 4-வது பந்தை லாங் ஆஃப் திசையில் ரிஷப் பண்ட் அடித்தார். ஆனால் பந்து ரியான் பராக்கின் கைக்கு சென்றது. அப்போது ரிஷப் பண்ட் ரன் எடுக்க ஓடி முயன்றபோது, துரிதமாக செயல்பட்ட ரியான், கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்பை நோக்கி வீசி ரிஷப் பந்தை அவர் ரன் அவுட் செய்தார். இதனால் டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது.

நடனம்

ரிஷப் பண்ட்-ன் விக்கெட்டை எடுத்தவுடனேயே இளம் வீரர் ரியான் பராக் பிஹு நடனம் ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த 2 வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இது போட்டியின் முக்கிய விக்கெட்டாக பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, April 15, 2021, 23:44 [IST]
Other articles published on Apr 15, 2021
English summary
Riyan Parag's Brilliant Piece Of Fielding as Rishabh Pant got Run-Out - Watch
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X