இனி ப்ளேயிங் 11-ல் இருப்பது சந்தேகம்..தோனியையே கடுப்பேற்றிய இளம் வீரர்.. அதிரடி முடிவெடுக்க வாய்ப்பு

மும்பை: சென்னை அணியில் இளம் வீரர் ஏற்படுத்திய கோபம் இனி அவருக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்காது என்னும் அளவிற்கு சென்றுள்ளது.

அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்.. CSK-வுக்கு எதிராக தமிழில் ஸ்கெட்ச் போட்ட வீரர்கள்

நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

அந்த இருவர் மீது கோபம்.. பஞ்சாப் போட்டிக்கு பின்.. டிரெஸ்ஸிங் ரூமில் கத்திய தோனி.. என்ன நடந்தது?

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் எந்த மாற்றமும் செய்யாமல் வந்த சிஎஸ்கே அணி, அடுத்த போட்டியில் முக்கிய வீரரை வெளியேற்ற முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.

வெற்றி

வெற்றி

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சரிய, ஷாருக்கான் மட்டும் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி டூப்ளசிஸ் மற்றும் மொயின் அலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியது.

 ஏமாற்றிய இளம் வீரர்

ஏமாற்றிய இளம் வீரர்

சென்னை அணியின் தொடக்க வீரர் ருத்ராஜ் கெயிக்வாட், இலக்கு குறைவாக இருந்த போதும், 5 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தார். முதல் போட்டியிலும் இவர் 5 ரன்களுக்கு வெளியேறியிருந்தார். சிஎஸ்கே அணியில் இந்தாண்டு அனுபவ வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் கடந்தாண்டு சிறப்பாக செயல்பட்டார் என்ற காரணத்திற்காக ருத்ராஜுக்கு தோனி வாய்ப்பு கொடுத்து வந்தார்.

புது வீரருக்கு வாய்ப்பு

புது வீரருக்கு வாய்ப்பு

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் கெயிக்வாட் ஏமாற்றம் அளித்ததால் அணி ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். எனவே அடுத்த போட்டியில் அவர் உட்கார வைக்கப்படுவார் எனக்கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ஓப்பனிங்கில் ராபின் உத்தப்பாவை களமிறக்க சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளது.

முடிவெடுப்பாரா தோனி

முடிவெடுப்பாரா தோனி

ஐபிஎல்-ல் அனுபவ வீரரான உத்தப்பா, கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியில் ஆடி வந்தார். ஆனால் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனிடையே இந்தாண்டு சிஎஸ்கே அணி டிரேடிங் முறையில் அவரை ரூ. 3 கோடிக்கு வாங்கியுள்ளது. ஏற்கனவே சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் களமிறங்க வாய்ப்புக்கொடுத்தால் சிறப்பாக ஆடுவேன் என உத்தப்பா தெரிவித்திருந்தார். எனவே அடுத்த போட்டியில் உத்தப்பாவுக்கு ஓப்பனிங் வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Robin Uthappa Might Get A Chance To Open With Faf du Plessis instead of young player in Next Match
Story first published: Saturday, April 17, 2021, 16:36 [IST]
Other articles published on Apr 17, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X