For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தலைவனுக்கு எல்லாம் தெரியும்.. சிஎஸ்கேவிற்கு கை கொடுத்த தோனியின் அந்த முடிவு..எவ்வளவு வெறி பாருங்க!

திருவானந்தபுரம்: விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் கேரளா அணி சார்பாக இன்று ராபின் உத்தப்பா அதிரடியாக ஆடி 87 ரன்களை எடுத்துள்ளார்.

2021 ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணி எடுத்து இருக்கும் வீரர்கள் கலக்க தொடங்கி உள்ளனர். தலைவனுக்கு ஏலத்தில் யாரை எடுக்க வேண்டும் என்று தெரியும் என சிஎஸ்கே சிஎஸ்கே சிஇஓ தெரிவித்து இருந்தார்.

மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து

அவர் சொன்னது போலவே தற்போது சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்த வீரர்கள் எல்லோரும் அதிரடியாக ஆட தொடங்கி உள்ளனர். முதல் தர போட்டிகளில் சிஎஸ்கே வீரர்கள் கலக்கி வருகிறார்கள் .

கேரளா

கேரளா

இன்று நடந்த விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் கேரளா அணி மிகவும் சிறப்பாக ஆடியது. இதில் கேரளாவிற்கு எதிராக ஆடிய பீகார் அணி 148 ரன்களை 40 ஓவரில் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை சேஸ் செய்த கேரளா தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டியது.

வெற்றி

வெற்றி

அதன்படி வெறும் 8.5 ஓவரில் கேரளா அணி 149 ரன்கள் எடுத்து பீகாரை வீழ்த்தியது. கேரளா சார்பாக களமிறங்கிய ராபின் உத்தப்பா அதிரடியாக ஆடி 32 பந்தில் 87 ரன்கள் எடுத்தார். இவர் இன்று மட்டும் 10 சிக்ஸ், 4 பவுண்டரிகளை அடித்தார்.

அதிரடி

அதிரடி

இந்த விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் தொடர்ந்து ராபின் உத்தப்பா அதிரடியாக ஆடி வருகிறார். இரண்டு சதம், ஒரு 80+ என்று கலக்கிய ராபின் உத்தப்பா இன்றும் 87 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருக்கிறார். இதுவரை ஐந்து போட்டிகளில் உத்தப்பா 375 ரன்கள் எடுத்துள்ளார்.

உத்தப்பா

உத்தப்பா

இந்த சீசனில் உத்தப்பாதான் அதிக ரன் எடுத்த வீரர். இவரை சிஎஸ்கே அணியில் எடுத்த போது அது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில் தன்னுடைய சிறப்பான ஆட்டம் மூலம் சிஎஸ்கே அணிக்கு இவர் பெரிய நம்பிக்கை அளித்துள்ளார்.

Story first published: Sunday, February 28, 2021, 16:38 [IST]
Other articles published on Feb 28, 2021
English summary
IPL 2021: Robin Uththappa smashes another 87 in just 32 balls in Vijay Hazare Trophy .
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X