For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த முறையும் சிஎஸ்கேவுக்கு தோல்வியா?..அதிரடி வீரர்களை களமிறக்கும் மும்பை அணி.. ப்ளேயிங் 11 விவரம்

அமீரகம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக மிகவும் அதிரடியான ப்ளேயிங் 11-ஐ உருவாக்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

Recommended Video

IPL 2021 1st Phase: CSK's 3 Best Bowlers | OneIndia Tamil

ஐபிஎல் தொடரின் 2வது பகுதி ஆட்டங்கள் வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் தொடங்கவுள்ளது. இதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அனைத்து அணிகளும் அமீரகத்திற்கு சென்று பயிற்சிகளை தொடங்கிவிட்டன. அயல்நாட்டு வீரர்களின் பிரச்னைகளையும் முடித்து அணிகள் நிம்மதியடைந்துள்ளன.

வாள் தூக்கி நின்னான் பாரு.. தனி ஆளாக சம்பவம் செய்த ஏபிடி.. மும்பையை வீழ்த்திய ஆர்சிபி.. மாஸ் வெற்றி!வாள் தூக்கி நின்னான் பாரு.. தனி ஆளாக சம்பவம் செய்த ஏபிடி.. மும்பையை வீழ்த்திய ஆர்சிபி.. மாஸ் வெற்றி!

ஐபிஎல் முதல் போட்டி

ஐபிஎல் முதல் போட்டி

மீண்டும் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களுக்கு சரவெடி விருந்து வைத்துள்ளது பிசிசிஐ. அதாவது அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த சீசனின் இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியிருந்தது. எனவே சிஎஸ்கே பழிவாங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அணி திட்டம்

அணி திட்டம்

சிஎஸ்கே அணியை எதிர்கொள்வதற்காக மிகவும் பலமான ப்ளேயிங் 11- ஐ மும்பை இந்தியன்ஸ் அணி உருவாக்கியுள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை வழக்கம் போல குயிண்டன் டிகாக் மற்றும் ரோகித் சர்மா ஓப்பனிங் களமிறங்கவுள்ளனர். அதே போல முதல் விக்கெட்டிற்கு இஷான் கிஷான், அடுத்தடுத்த விக்கெட்களுக்கு சூர்யகுமார் யாதவ், கெயிரன் பொல்லார்ட் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

ஸ்பின்னர்கள்

ஸ்பின்னர்கள்

பவுலிங்கில் தான் மும்பை அணி மாற்றங்களை செய்யவுள்ளது. ஹர்திக் பாண்ட்யாவின் பவுலிங் மற்றும் பேட்டிங் ஃபார்ம் ரோகித்திற்கு மிகப்பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பின்னர்களை பொறுத்தவரை ராகுல் சஹார் மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகியோர் முதன்மை தேர்வாக உள்ளனர். இவர்களுடன் சேர்ந்து கூடுதல் ஸ்பின்னராக ஜெயந்த் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பவுலர்கள்

பவுலர்கள்

அந்த அணியில் வேகப்பந்துவீச்சுக்கு ஜேம்ஸ் நீசம், ஆடம் மில்ன், மார்கோ ஜான்சென், கோல்டர் நைல் என தேர்வுகள் அதிகளவில் உள்ளன. எனினும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட்டிற்கான இடங்கள் உறுதியாகியுள்ளன. ஹர்திக் பாண்ட்யா பந்துவீச முழு உடற்தகுதியுடன் இருப்பதால் 2 வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே ரோகித் சர்மா சேர்த்துள்ளதாக தெரிகிறது.

ப்ளேயிங் 11 கணிப்பு:

ப்ளேயிங் 11 கணிப்பு:

குயிண்டன் டிகாக், ரோகித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், பொல்லாட், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், பும்ரா, ட்ரெண்ட் போல்ட்

Story first published: Friday, September 17, 2021, 18:28 [IST]
Other articles published on Sep 17, 2021
English summary
Rohit Sharma have a Strong plan for CSK Match, mumbai indians playing 11 details
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X