For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“சங்கடமாக இருந்தது”.. பேட்டியின் போது மனம் கலங்கிய ரோகித் சர்மா.. மும்பை ரசிகர்கள் சோகம்!

அமீரகம்: மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது குறித்து ரோகித் சர்மா மனம் கலங்கியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் மிக முக்கிய போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ஆனால் ப்ளே ஆஃப் செல்ல முடியவில்லை.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

டாஸ் வென்று முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களல் 235/9 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ஓப்பனிங் வீரர் இஷான் கிஷன் 32 பந்துகளில் 84 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 82 ரன்களும் குவித்தனர்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 65 ரன்களுக்குள் சுருட்டினால் மட்டுமே மும்பை ப்ளே ஆஃப் செல்லும் என்ற இக்கட்டான சூழல் இருந்தது.

 மும்பை வெளியேறியது

மும்பை வெளியேறியது

ஆனால், மும்பை பவர் பிளேயிலேயே 70 ரன்கள் அடிக்கவிட்டு, பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 193/8 ரன்கள் சேர்த்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 69 (41) ரன்களும், ஜேசன் ராய் 34 (21) ரன்களும் சேர்த்தனர்.

ரோகித் விளக்கம்

ரோகித் விளக்கம்

இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா மனம் கலங்கினார். அப்போது பேசிய அவர், மும்பை போன்ற பெரிய அணிக்காக விளையாடும்போது, சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இதனை நான் அழுத்தம் எனக் கூற மாட்டேன். அதற்கும் மேலானது. முக்கியமான போட்டிகளுகாக சில சீனியர் வீரர்களை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது உண்மையில் சங்கடமான விஷயம்தான். இருப்பினும், வெற்றிபெற்ற அணியை மாற்ற முடியாது.

தோல்விக்கான காரணம்

தோல்விக்கான காரணம்

இந்த சீசனில் வெற்றி, தோல்வி மாறி மாறி வந்தது. ஆனால் அனைவருமே அணிக்காக சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். டெல்லியில் விளையாடியபோது வெற்றி பயணத்திற்கு நல்ல துவக்கம் கிடைத்தது. அதன்பிறகு நீண்ட இடைவேளை இருந்ததால், அது உதவிக்கரமாக இல்லை. இன்று நாங்கள் சிறப்பாக விளையாடினோம். ரன் மழை நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக இருந்திருக்கும். ரசிகர்களின் ஆதரவு எப்போதும் எங்களுக்கு இருக்கும் எனத் தெரிவித்தார்.

Story first published: Saturday, October 9, 2021, 13:27 [IST]
Other articles published on Oct 9, 2021
English summary
IPL 2021: Rohit sharma's Explanation on Mumbai's collaps in this season Rohit sharma's Explanation on Mumbai's collaps in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X