For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆட்டத்தின்போது ரோகித்திடம் இதனை கவனத்தீர்களா.. எவ்ளோ பெரிய மனசு அவருக்கு.. குவியும் பாராட்டு

சென்னை: இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் ரோகித் சர்மா ஆட்டத்தை தாண்டி செய்து வரும் வித்தியாசமான செயல் ஒன்று பாராட்டப்பட்டு வருகிறது.

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக ரோகித் சர்மா திகழ்ந்து வருகிறார்.

ஐபிஎல்லுல அதிக வெற்றி... 'தல' தாங்க முன்னிலை... அடுத்த இடத்தை தாவி பிடிச்சுருக்காரு ஹிட்மேன்! ஐபிஎல்லுல அதிக வெற்றி... 'தல' தாங்க முன்னிலை... அடுத்த இடத்தை தாவி பிடிச்சுருக்காரு ஹிட்மேன்!

இவரின் தலைமையில் 5 முறை கோப்பை வென்றுள்ள மும்பை அணி இந்தாண்டும் கோப்பையை வென்று ஹாட்ரிக் அடிக்க வேண்டும் என மும்முரமாக உள்ளது.

கவனம் ஈர்த்த ரோகித்

கவனம் ஈர்த்த ரோகித்

இந்த சீசனின் முதல் போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்த மும்பை அணி நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி தனது வெற்றி கணக்கை தொடங்கியது. இந்நிலையில் மும்பை அணியின் ஆட்டத்தை விட அந்த அணி கேப்டன் ரோகித் சர்மாவின் அணியும் ஷூ மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

காண்டா மிருகம்

காண்டா மிருகம்

ரோகித் சர்மா இயற்கையை காப்பதற்காக தனது குரல்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, உலகில் காண்டா மிருகங்கள் அழிவதை தடுத்து அவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ' Save Rhinos' என அச்சிட்டு இருந்த ஷூ-வை பயன்படுத்தி விளையாடினார். அந்த ஷூ காண்டா மிருகத்தின் உடலமைப்பு போன்ரு உருவாக்கப்பட்டிருந்தது. இது ரசிகர்களிடையே தனி கவனத்தை பெற்றது.

2வது முயற்சி

2வது முயற்சி

இந்நிலையில் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற 3வது போட்டியில், கடலில் ப்ளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை தடுக்க வலியுறுத்தி 'Plastic Free Ocean' என அச்சிட்டிருந்த ஷூ-வை அணிந்துக்கொண்டு விளையாடினார். அந்த ஷூ கடலை போன்று நீல நிறத்தில் டிசைன் செய்யப்பட்டிருந்தது.

ரசிகர்களுக்கு வலியுறுத்தல்

ரசிகர்களுக்கு வலியுறுத்தல்

இதுகுறித்து ட்வீட் செய்திருந்த ரோகித், உலகில் சரிசெய்ய வேண்டிய அடுத்த இயற்கை பிரச்னையாக எனக்கு இதயத்தில் தோன்றியது கடலில் ப்ளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதுதான். அதற்காக நான் ஒரு முயற்சி எடுக்கிறேன். இது இதோடு நின்றுவிடாது. அனைவரும் ஒத்திழைப்பு தரவேண்டும். ப்ளாஸ்டிக் இல்லா சமூத்திரத்தை உருவாக்க நம்மால் 100% முடியும் எனத்தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, April 14, 2021, 18:16 [IST]
Other articles published on Apr 14, 2021
English summary
Rohit Sharma Uses His Shoes To Highlight the Natural Issues to create awarness
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X