மும்பை இந்தியன்ஸை வீழ்த்த பக்கா ஆர்சிபி அணி ரெடி.....கணிக்கப்பட்ட ப்ளேயிங் 11...முடிவெடுப்பாரா கோலி?

சென்னை: இந்தாண்டு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்க உதவியாக இருக்கும் ஆர்சிபி அணியின் ப்ளேயிங் 11 கணிக்கப்பட்டுள்ளது.

14வது ஐபிஎல் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி இந்தாண்டு எந்த ப்ளேயிங் 11 உடன் களமிறங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஓப்பனிங் ஜோடி

ஓப்பனிங் ஜோடி

கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடி தொடக்க வீரர் தேவ்தத் பட்டிக்கல் இந்த முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டார். எனினும் தற்போது அவர் குணமடைந்து அணியுடன் இணைந்துள்ளார். எனவே அவரே தான் இந்தாண்டும் ஓப்பனிங் களமிறங்குவார். மற்றொரு வீரராக நான் தான் களமிறங்குவே என விராட் கோலி ஏற்கனவே அறிவித்துவிட்டார். எனவே இவர்கள் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மிடில் ஆர்டரில் யார்?

மிடில் ஆர்டரில் யார்?

அணியில் இந்த முறை க்ளென் மேக்ஸ்வெல் எடுக்கப்பட்டுள்ளார். அவருடன் டிவில்லியர்ஸும் உள்ளார். எனவே இருவரும் அதிரடி வீரர்கள்தான் என்பதால், நிலைமையை பொறுத்து 3வது மற்றும் 4வது இடத்தை மாற்றிக்கொள்வார்கள் என தெரிகிறது. அணியின் 4 மற்றும் 5வது வீரர்களாக முகமது அசாருதீன் மற்றும் சச்சின் பேபி உள்ளனர். இருவரும் நடந்துமுடிந்த சையது முஷ்டக் அலி கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதால் டாப் ஆர்டர் சரிந்தாலும் இவர்கள் பொறுப்புடன் அணியை மீட்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல் ரவுண்டர்கள்

ஆல் ரவுண்டர்கள்

டேனியல் சாம்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் டேனியல் கிறிஸ்டியன் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. அதே போல இவர் ஃபினிஷராகவும் செயல்படலாம். அவருக்கு அடுத்தபடியாக வாஷிங்டன் சுந்தர் உள்ளார். கடந்த முறை சிறப்பாக செயல்பட்ட இவர் இந்த முறையும் நல்ல ஃபார்மில் உள்ளார். அதே போல ஆர்சிபி அணியால் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட கெயில் ஜேமிசன் அணிக்கு தன்னை நிரூபித்து காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

ஆர்சிபி ரசிகர்கள் அனைவரின் பார்வையும் யுஸ்வேந்திர சஹால் மீது திரும்பியுள்ளது. இங்கிலாந்து தொடரில் சோபிக்க தவறி இவர் நாளைய போட்டியில் தன்னை நிரூபித்தே ஆக வேண்டும். இதே போல சர்வதேச தொடர்களிலும் சிறப்பாக ஆடிய முகமது சிராஜ் முக்கிய பவுலராக அணியில் இருப்பார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Royal Challengers Bangalore Predicted Playing XI for first match against Mumbai Indians in IPL 2021
Story first published: Thursday, April 8, 2021, 17:19 [IST]
Other articles published on Apr 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X