For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தீவிரமடையும் ஆக்சிஜன் தட்டுபாடு.. சச்சின் செய்த பெரும் உதவி.. இளைஞர்களை நம்பி துணிச்சல் செயல்!

மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

கொரோனா தொற்றின் 2ம் அலை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளொன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பல்வேறு மாநிலங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

உடைந்த நம்பிக்கை... மீண்டும் சொதப்பிய கொல்கத்தா டாப் ஆர்டர்.. டெல்லி அணிக்கு எளிய இலக்கு!உடைந்த நம்பிக்கை... மீண்டும் சொதப்பிய கொல்கத்தா டாப் ஆர்டர்.. டெல்லி அணிக்கு எளிய இலக்கு!

தட்டுபாடு

தட்டுபாடு

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க அயல்நாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் வாங்கப்பட்டு வருகிறது. அதற்காக அரசிற்கும் தன்னார்வல அமைப்புகளுக்கும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இளம் தொழிலதிபர்களால் தொடங்கப்பட்டுள்ள மிஷண் ஆக்சிஜன் இந்தியா என்ற திட்டத்திற்கு அவர் இந்த உதவியை செய்துள்ளார்.

சச்சின் நிதியுதவி

சச்சின் நிதியுதவி

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா 2ம் அலை மருத்துவ துறையை கடும் அழுத்ததிற்கு ஆளாக்கியுள்ளது. தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது பெரிய பிரச்னையாக உள்ளது. மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் தவிப்பதை பார்த்து மனம் வலிக்கிறது.

 ஒன்றிணைந்து போராடுவோம்

ஒன்றிணைந்து போராடுவோம்

இதற்காக இளம் தொழிலதிபர்கள் ஒன்றிணைந்து ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் வாங்க திட்டத்தை தொடங்கியுள்ளனர். அதில் நானும் பங்காற்றியுள்ளேன். விரைவில் அவர்களது சேவை இந்தியா முழுவதும் உள்ள மருத்துமனைகளுக்கு சென்றடையும் என நம்புகிறேன். நான் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு என்னுடம் நீங்கள் அனைவரும் துணை இருந்தீர்கள். தற்போது கொரோனாவை எதிர்த்து போராட நாம் ஒன்றிணைந்து நிற்போம் என குறிப்பிட்டுள்ளார்.

 கிரிக்கெட் வீர்ரர்கள்

கிரிக்கெட் வீர்ரர்கள்

சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்து வந்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இதே போல சமீபத்தில் கிரிக்கெட் வீரர்கள் பேட் கம்மின்ஸ், பிரட்லீ ஆகியோர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆக்சிஜன் வாங்குவதற்காக நிதியுதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 30, 2021, 14:36 [IST]
Other articles published on Apr 30, 2021
English summary
Sachin Tendulkar donates Rs 1 crore to 'Mission Oxygen' for Buying oxygen concentrators
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X