For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அவர் அணியில் இருப்பதே வேஸ்ட்”.. அஸ்வினை கடுப்பாக்கிய முன்னாள் வீரர்.. என்ன பதிலடி வரப்போகிறது?

அமீரகம்: தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இருப்பதே வேஸ்ட் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சீண்டியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

அஸ்வின்-மோர்கன் மோதல்: வார்னுக்கு பதிலடி.. அஸ்வினுக்கு ஆதரவாக கருத்து கூறிய டெல்லி உரிமையாளர்! அஸ்வின்-மோர்கன் மோதல்: வார்னுக்கு பதிலடி.. அஸ்வினுக்கு ஆதரவாக கருத்து கூறிய டெல்லி உரிமையாளர்!

கேகேஆர் அணி

கேகேஆர் அணி

இந்த முறை சென்னை மற்றும் டெல்லி அணிகள் தான் இறுதிப்போட்டியில் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொல்கத்தா அதனை மாற்றி அமைத்துவிட்டது. அதாவது முதலாவது குவாலிபயர் போட்டியில் சென்னை அணியிடமும், இரண்டாவது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியிடமும் டெல்லி அணி தோல்வியடைந்து வெளியேறியது. லீக் சுற்றுகளின் முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி அணி, ப்ளே ஆஃப்-ல் கொல்கத்தாவிடம் தோற்றது.

சர்ச்சையில் அஸ்வின்

சர்ச்சையில் அஸ்வின்

கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 135 ரன்கள் மட்டுமே குவித்தது. குறைவான இலக்கை நிர்ணயித்த போதும், டெல்லி அணி ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை வெற்றி வாய்ப்பை தக்கவைத்திருந்தது. எனினும் கடைசி ஓவரை அஷ்வின் வீசியது தான் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தளத்தின் மூலமாக விமர்சித்து வருகின்றனர்.

விளாசிய மஞ்ச்ரேக்கர்

விளாசிய மஞ்ச்ரேக்கர்

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் டெல்லி அணி பெற்ற இந்த தோல்விக்கு அஸ்வின் தான் காரணம் என விளாசியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், அஸ்வின் கடந்த 5 ஆண்டுகளாகவே எந்தவித மாற்றமும் இன்றி ஒரே ஸ்டைலில் பந்துவீசி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பான வீரர் தான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் டி20 போட்டிகளில் பொறுத்தவரை அவர் வேலைக்கு ஆகமாட்டார். அவர் அணியில் இருப்பதே வேஸ்ட்.

 அவர்களே சிறந்தவர்கள்

அவர்களே சிறந்தவர்கள்

அஸ்வின் பந்துவீச்சில் முன்னேற்றங்களும், மாற்றங்களும் தேவை. என்னைப் பொறுத்தவரை தற்போதுள்ள டி20 போட்டிகளில் மைதானத்துக்கு ஏற்றார்போல் செயல்படுபவர்களாக சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, சாஹல் போன்றவர்களே ஆகும். எனவே அஸ்வின் டெல்லி அணியில் இருப்பது வேஸ்ட் என சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சித்துள்ளார்.

Story first published: Friday, October 15, 2021, 15:48 [IST]
Other articles published on Oct 15, 2021
English summary
Sanjay Manjrekar Critises Ravi Ashwin for the Last Over against KKR in Play offs of IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X