For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவர் இதுக்கு முன்னாடி இப்படி பேசியது இல்லையே? என்ன திடீர்ன்னு.. ஒரு மேட்ச் முடிஞ்சதும் இப்படியா?

சென்னை: மும்பைக்கு எதிரான போட்டியில் ஏபிடிவில்லியர்ஸ் செய்த விஷயத்தை பாராட்ட ஆங்கிலத்தில் பெரிய வார்த்தை ஏதேனும் உள்ளதா என முன்னாள் வீரர் பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியான நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது நம்ம லிஸ்டலயே இல்லையே! முதல் போட்டிக்கு ரிஷப் பண்ட் ஐடியா.. தோனியே எதிர்பார்த்திருக்க மாட்டார்!இது நம்ம லிஸ்டலயே இல்லையே! முதல் போட்டிக்கு ரிஷப் பண்ட் ஐடியா.. தோனியே எதிர்பார்த்திருக்க மாட்டார்!

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஏபிடிவில்லியர்ஸுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

 திக் திக் நிமிடம்

திக் திக் நிமிடம்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி 'த்ரில்' வெற்றி பெற்றது. கடைசி பந்தில் ஒரு ரன்கள் தேவை என்ற நிலையை உருவாக்கி இரு அணிகளும் முதல் போட்டியிலேயே ரசிகர்களுக்கு பதற்றத்தை உண்டாக்கினர்.

 டிவில்லியர்ஸ் ஷோ

டிவில்லியர்ஸ் ஷோ

ஆர்சிபி அணி்யை வெற்றியின் நுணி வரை கொண்டு வந்து சேர்த்தது ஏபி டி வில்லியர்ஸ் தான். அணியின் விக்கெட்கள் சரிந்த நிலையில் பொறுப்பாக ஆடிய அவர் மும்பை அணியின் சுழற்பந்துவீச்சை துவம்சம் செய்தார். சிறப்பாக ஆடி வந்த இவர் கடைசி ஓவரின் 4-வது பந்தில் ரன்-அவுட் ஆகி 48 ரன்னில் (2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) வெளியேறினார். கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்சல் படேல் களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார். இதில் கேப்டன் கோலி 33 ரன்களிலும், மேக்ஸ்வெல் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

உட்சபட்ச பாராட்டு

உட்சபட்ச பாராட்டு

டிவில்லியர்ஸுக்கு வயதாகிவிட்டது, அவர் நீண்ட காலம் கிரிக்கெட் ஆடவில்லை விமர்சனங்கள் எழுந்தநிலையில் நேற்றைய ஆட்டத்திற்கு பிறகு அவருக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறது. அதில் உட்சப்பட்ச பாராட்டை தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், நான் ஆங்கலம் எனக்கு அவ்வளவு பலம் இல்லை. அதிபுத்திசாலி ( Genius) என்ற வார்த்தையை விட பெரியது ஏதேனும் இருந்தால் அதுதான் டிவில்லியர்ஸ் என தெரிவித்துள்ளார்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

இதே போல டிவில்லியர்ஸ் குறித்து பாராட்டியுள்ள முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சென்னையில் த்ரில் மேட்ச் நடைபெற்றது, MR. 360 டிவில்லியர்ஸ் சர்வதேச போட்டிகளில் ஆடாமல் இன்னும் எப்படி இப்படி ஆடுகிறார் என்பது நம்பவே முடியவில்லை. வியப்பாக உள்ளது. என பாராட்டியுள்ளார்.

ஏபிடி விளக்கம்

ஏபிடி விளக்கம்

ஆட்டத்தை முடித்துக்கொடுத்துவிட்டு ஏபிடி சென்றிருக்கலாம் என்ற குரல்களும் எழுந்து வருகிறது. இதனிடையே தனது திடீர் ரன் அவுட் குறித்து அவர் கூறுகையில்,

முன்பு டிரெட்மில்லில் ரன்னிங் பயிற்சி எடுத்தேன். ஆனால் அது கடினமானதாக இல்லை. அதனால் எனக்கு அதில் திருப்தியில்லை. தற்போது மணலில் ரன்னிங் பயிற்சி எடுக்கிறேன். ரன்-அவுட் எப்படி ஆனேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் தட்டிவிட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓடத் தொடங்கிய போது, நான் பின்னோக்கி ஓடுவதைப் போல உணர்ந்தேன். அது ஒரு அருமையான த்ரோ'' என்றார்.

Story first published: Saturday, April 10, 2021, 17:01 [IST]
Other articles published on Apr 10, 2021
English summary
Sanjay Manjrekar's praise for RCB batsman AB de Villiers after his Match winning innigs
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X