For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த ஒரு விஷயம் தான்.. எல்லாத்தையும் மாத்திடுச்சு.. சிஎஸ்கேவிடம் தோல்வி.. சஞ்சு சாம்சன் அதிருப்தி!

மும்பை: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கு ஒரே ஒரு விஷயம் தான் காரணம் என குறிப்பிட்டு அதிருப்தி தெரிவித்துள்ளார் சஞ்சு சாம்சன்.

Recommended Video

IPL 2021: ஓடி வந்து அறிவுரை வழங்கிய Du Plessis கொஞ்ச நேரத்தில் Sanju Samson-ஐ காலி செய்த Sam Curran

சென்னை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இவரை ஏன் மீண்டும் கொண்டு வந்தார்.. மொத்தமாக குழப்பிய தோனி.. அரண்டு போன ராஜஸ்தான்.. அப்பதான் டிவிஸ்ட்இவரை ஏன் மீண்டும் கொண்டு வந்தார்.. மொத்தமாக குழப்பிய தோனி.. அரண்டு போன ராஜஸ்தான்.. அப்பதான் டிவிஸ்ட்

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 188/9 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 143/9 மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

தொடக்கம்

தொடக்கம்

189 என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி முதலில் சிறப்பாக ஆடியது. ஆனால் மிடில் ஆர்டரில் மலமலவென விக்கெட்களை இழந்து கடும் சிக்கலை எதிர்கொண்டது. 11 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 87 ரன்களை அடித்த ராஜஸ்தான் அணி பலமாக இருந்தது. பின்னர் சிஎஸ்கே ஆல்ரவுண்டர்கள், ஜடேஜா மற்றும் மொயின் அலியின் சுழலில் சிக்கி சரிந்தது.

திடீர் திருப்புமுனை

திடீர் திருப்புமுனை

ஆட்டத்தின் 12வது ஓவரில் ஜாஸ் பட்லர் 49 ரன்களுக்கு ஜடேஜாவால் போல்ட் ஆனார். அதே ஓவரில் ஷிவம் தூபேவும் எல்.பி.டபள்யூ முறையில் அவுட்டாகி நடையை கட்டினார். இதன்பின்னர் மொயின் அலி வீசிய 15வது ஓவரில் ரியான் பராக், கிறிஸ் மோரிஸ் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 8 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணியில் 5 விக்கெட்கள் சரிந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

சாம்சன் விளக்கம்

சாம்சன் விளக்கம்

இதுகுறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், மிடில் ஓவர்களில் பந்தில் இவ்வளவு டேர்னிங் இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. இரவு பனியானது இறங்க தொடங்கிய போது பந்தில் டேர்னிங் இருந்தது மிகவும் அதிர்ச்சியளித்தது. இதனால் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக சென்றது.

மிகவும் நம்பினேன்

மிகவும் நம்பினேன்

இந்த மைதானத்தின் பிட்ச் 2வதாக பேட்டிங் செய்தவதற்கு சிறந்தது என நினைத்தேன். ஆனால் மிடில் ஓவர்களில் நிறைய விக்கெட்களை இழந்தோம். எங்கள் அணியில் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். அதே போல பேட்டிங்கிலும் நுனுக்கமாகதான் இருந்தனர். குறிப்பாக சேட்டன் சக்காரிய மிகச்சிறப்பாக ஆடினார். இந்த போட்டியில் நாங்கள் தோற்றாலும், நம்பிக்கையுடன் தான் உள்ளோம் எனத்தெரிவித்தார்.

Story first published: Tuesday, April 20, 2021, 11:05 [IST]
Other articles published on Apr 20, 2021
English summary
Sanju Samson explanation on reasons behind RR's collapse against CSK
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X