For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுதான் சூட்சமம்.. பார்த்து கத்துக்குங்க.. தோனிக்கு பாடம் எடுத்த சாம்சன்.. சிஎஸ்கே வெல்ல ஒரே வழி!

மும்பை: டெல்லி அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் வென்றதில் இருந்து சிஎஸ்கே முக்கியமான பாடம் ஒன்றை கற்க வேண்டி உள்ளது.

Recommended Video

Sanju Samson Takes Stunning catch Against Delhi capitals |Oneindia Tamil

டெல்லிக்கு எதிரான நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது. டெல்லி போன்ற வலிமையான பேட்டிங் ஆர்டர் கொண்ட அணியை ராஜஸ்தான் நேற்று தூசு தட்டியது.

முதல் போட்டியில் டெல்லியிடம் சிஎஸ்கே வீழ்ந்தது. இந்த நிலையில் அதே டெல்லியை தற்போது ராஜஸ்தான், சாதாரண பவுலிங் அட்டாக் வைத்தே வென்றுள்ளது.

சஞ்சு

சஞ்சு

இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தனது பவுலர்களை மிகவும் சிறப்பாக பயன்படுத்தினார். முக்கியமாக ஸ்லோ பால் வீசும் பவுலர்களை, முடிந்த அளவு வேகமாக வீச வைத்தார். அதேபோல் பவுன்சர் பந்துகளையும் அதிகமாக வீச வைத்து சஞ்சு சாம்சன் டெல்லியின் விக்கெட்டுகளை எடுத்தார்.

மும்பை

மும்பை

மும்பை பிட்ச் வேகமாக பவுலிங் செய்தால் ஒத்துழைக்கும். அதேபோல் பவுன்சர் பந்துகளை வீசினால் விக்கெட் எடுக்க முடியும். இதை நேற்று சஞ்சு சாம்சன் பயன்படுத்திக்கொண்டு டெல்லி போன்ற வலிமையான பேட்டிங் ஆர்டர் கொண்ட அணியை 147 ரன்களுக்கு சுருட்டினார்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

ஆனால் டெல்லிக்கு எதிராக இதே பிட்சில் ஆடிய சிஎஸ்கே அணி இப்படி பவுன்சர்களை வீசவில்லை. அதேபோல் பந்துகளை சிஎஸ்கே அணி வேகமாகவும் வீசவில்லை. அதிகமாக ஸ்லோ பால்கள், கட்டர்களை சிஎஸ்கே அணி பயன்படுத்தியது. இதனால்தான் சாகர், ஹரத்துல் போன்ற வீரர்களால் பெரிதாக விக்கெட் எடுக்க முடியவில்லை.

மும்பை

மும்பை

தற்போது மும்பை பிட்சில் எப்படி பவுலிங் செய்ய வேண்டும், சூட்சமம் என்ன என்று சஞ்சு சாம்சன் கற்றுக்கொடுத்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு முதல் சில போட்டியில் மும்பையில் நடக்கிறது. சாம்சனின் இந்த சூட்சமத்தை பயன்படுத்திக்கொண்டு சிஎஸ்கே இனி வரும் போட்டிகளில் வெற்றிபெற முயல வேண்டும்.

Story first published: Friday, April 16, 2021, 13:21 [IST]
Other articles published on Apr 16, 2021
English summary
IPL 2021: Sanju Samson gives the secret to win in Mumbai pitch with the normal bowling attack
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X