For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவருக்கு இப்படி ஒரு நிலைமையா..சாதனை படைத்தபோதும் மிஸ்ரா கேட்ட அந்த கேள்வி.. நினைவுக்கூர்ந்த சேவாக்!

சென்னை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கலக்கிய அமித் மிஸ்ரா குறித்து சேவாக் நினைவுக்கூர்ந்துள்ள விஷயம் மனம் உருகவைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சின்னப்பையன்.. சிஎஸ்கேவை மிரள வைத்த இளம் வீரர்.. ஆடிப்போன 3 ஜாம்பவான்கள்.. எப்படி சாத்தியம் ஆனது?சின்னப்பையன்.. சிஎஸ்கேவை மிரள வைத்த இளம் வீரர்.. ஆடிப்போன 3 ஜாம்பவான்கள்.. எப்படி சாத்தியம் ஆனது?

இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அமித் மிஸ்ரா மும்பை அணி பேட்ஸ்மேன்களை திணறவைத்தார்.

அசத்தல் ஆட்டம்

அசத்தல் ஆட்டம்

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 137/9 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய 19.1 ஓவர்களில் 138/4 ரன்கள் எடுத்தது. நடப்பு சாம்பியனை வெறும் 137 ரன்களுக்கு சுருட்டியதற்கு முக்கிய மிகமுக்கியக் காரணம் அமித் மிஷ்ரா ஆகும். 4 ஓவர்கள் பந்துவீசி, வெறும் 24 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர். ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, கெய்ரின் பொல்லார்ட், இஷன் கிஷன் என மிகப்பெரிய விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி அசத்தினார்.

சாதனைகள்

சாதனைகள்

நேற்றைய போட்டியில் அசத்திய அமித் மிஸ்ராதான் ஐபிஎல் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் ஆவார். இவர் இதுவரை 3 ஹாட்ரிக் சாதனைகள் படைத்து ஐபிஎல்-ல் அதிக ஹாட்ரிக் சாதனைகள் நிகழ்த்திய வீரராகவும் திகழ்கிறார். இதுவரை 152 போட்டிகளில் விளையாடி 164 விக்கெட்களை எடுத்துள்ளார்.

புகழாரம்

புகழாரம்

இந்நிலையில் அமித் மிஸ்ரா குறித்து சுவாரஸ்ய விஷயத்தை சேவாக் பகிர்ந்துள்ளார். அவர், 2008ம் ஆண்டு நான் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக இருந்த போது அமித் மிஸ்ரா முதன் முதலாக ஹாட்ரிக் சாதனை படைத்தார். அவர் மிகவும் அமைதியானவர். பிற வீரர்களிடம் மென்மையாக நடந்துக்கொள்வார். அதனாலேயே அனைவருக்கும் பிடித்த நபராக அவர் உள்ளார். அவருடைய பந்தில் பேட்ஸ்மேன் அடித்து ஆடினால் அதற்காக மற்ற வீரர்கள் வருத்தப்படுவார்கள். அவர் விக்கெட் வீழ்த்தினால் அனைவருமே சந்தோஷப்படுவார்கள்.

 கோரிக்கை

கோரிக்கை

அவர் முதல் முறையாக ஹாட்ரிக் சாதனை படைத்த போது அவரிடம் உனக்கு என்ன வேண்டும் என நான் கேட்டேன். அதற்கு அவர் 'வீரு பாய் எனது சம்பளத்தை உயர்த்தி தாருங்கள்' எனக்கேட்டார். ஆனால் அதன் பிறகு அவர் மேலும் சில ஹாட்ரிக் சாதனைகள் படைத்த பிறகு தற்போதும் சம்பள உயர்வு கேட்கும் அளவிற்கு இல்லாமல் அதிக பணத்தை அவர் ஊதியமாக பெறுவார் என நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, April 21, 2021, 19:06 [IST]
Other articles published on Apr 21, 2021
English summary
Sehwag reveals DC spinner's Amit Mishra's request after his First hat trick in IPL
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X