For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதெல்லாம் ஒரு கேப்டன்சியா? பண்டை சரமாரியாக கிழித்த சேவாக்.. கடும் கோபம்.. என்ன காரணம்?

சென்னை: பெங்களூருக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் தோல்விக்கு கேப்டன் பண்டின் மோசமான திட்டமிடல்தான் காரணம் என்று சேவாக் விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி தோல்வி அடைந்தது. நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய பெங்களூர் 171 ரன்கள் எடுத்தது.

அவரை மீண்டும் எங்களுக்கே கொடுங்க.. சிஎஸ்கே ஓப்பனரை கேட்கும் ராஜஸ்தான்.. டிரான்ஸ்பர் பிளான்? அவரை மீண்டும் எங்களுக்கே கொடுங்க.. சிஎஸ்கே ஓப்பனரை கேட்கும் ராஜஸ்தான்.. டிரான்ஸ்பர் பிளான்?

இதை சேஸ் செய்த டெல்லி அணி வெறும் 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. கடைசி பந்தில் கூடுதலாக 1 ரன் எடுக்க முடியாமல் டெல்லி அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது.

விமர்சனம்

விமர்சனம்

இந்த போட்டியில் பண்ட் எடுத்த முடிவுகள் விமர்சனத்திற்கு உள்ளாக்கி உள்ளது. முக்கியமாக பண்ட் கடைசி ஓவரில் ஹெட்மயருக்கு ஸ்டிரைக் கொடுக்காதது, ஆர்சிபிக்கு எதிராக 20வது ஓவரில் ஸ்டோனிஸை வைத்து வீச வைத்தது என்று நிறைய தவறான முடிவுகளை எடுத்தார். இதை தற்போது சேவாக் விமர்சனம் செய்துள்ளார்.

சேவாக்

சேவாக்

சேவாக் தனது விமர்சனத்தில், நான் பண்டிற்கு 10ல் 5 மார்க் கூட கேப்டன்சியில் கொடுக்க மாட்டேன். இது போன்ற தவறுகளை அவர் செய்ய கூடாது. அமித் மிஸ்ராவிற்கு அவர் ஏன் ஓவர் கொடுக்கவில்லை. அவருக்கு ஏன் கடைசி ஓவர் தரவில்லை.

மோசம்

மோசம்

இது முழுக்க முழுக்க பண்ட் தவறு. அவர் நேற்று போட்ட கணக்குகள் எல்லாமே தவறு. அவர் இனி மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். பவுலர்களை அவர் பயன்படுத்தும் விதம் சரியாக இல்லை. உடனே அவர் இதை சரி செய்ய வேண்டும்.

கற்றுக்கொள்ள வேண்டும்

கற்றுக்கொள்ள வேண்டும்

எந்த பவுலருக்கு, எப்போது ஓவர் கொடுக்கிறோம் என்பதில்தான் எல்லாமே இருக்கிறது. ஒரு கேப்டனாக பண்ட் இதில் தவறிவிட்டார். மனம் போன போக்கில் அவர் ஓவர்களை கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் நேற்று பீல்டிங் நிற்க வைத்த முறையும் மோசமாகவே இருந்தது என்று சேவாக் விமர்சனம் செய்துள்ளார்.

Story first published: Wednesday, April 28, 2021, 10:27 [IST]
Other articles published on Apr 28, 2021
English summary
IPL 2021: Shewag not impressed with Pant captaincy for DC against RCB yesterday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X