For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கா வாய்ப்பு கொடுக்கல.. பிசிசிஐ மீது கடும் கோபம்.. நேற்றைய போட்டியில் பதிலடி கொடுத்த ஷிகர் தவான்

துபாய்: டி20 உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கொடுக்காததற்கு ஷிகர் தவான் நேற்று கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 33-ஆவது போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் பின்னர் விளையாடிய டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 துளி போராட்டமின்றி சரண்டரான SRH - டி20 உலகக் கோப்பையில் சேர்க்காததற்கு வச்சு செய்த தவான்! துளி போராட்டமின்றி சரண்டரான SRH - டி20 உலகக் கோப்பையில் சேர்க்காததற்கு வச்சு செய்த தவான்!

ஐபிஎல் போட்டி

ஐபிஎல் போட்டி

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி வழக்கம் போல தொடக்கத்தில் இருந்தே தனது அதிரடியை காட்டியது. தொடக்க வீரர் ஷிகர் தவான் பவுண்டரிகளாக விளாசினார். 37 பந்துகளை சந்தித்த அவர், 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்களை விளாசி 42 ரன்களை சேர்த்தார். இதே போல டெல்லி அணியின் மற்றொரு சீனியர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் தனது ஆக்ரோஷ ஆட்டத்தை காட்டினார். 41 பந்துகளை சந்தித்த அவர் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 47 ரன்களை குவித்தார். இவர்கள் அமைத்த வலுவான பார்ட்னர்ஷிப்பால் டெல்லி அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

டி20 உலகக்கோப்பை அணி

டி20 உலகக்கோப்பை அணி

டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் மட்டுமே ஓப்பனிங்கிற்கு தேர்வு செய்யப்பட்டார். அதே போல ஷ்ரேயாஸ் ஐயரும் ரிசர்வ் வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவரால் நேரடியாக ப்ளேயிங் 11-க்கு செல்ல முடியாது.

Recommended Video

T20 World Cup 2021: Missed Players List | OneIndia Tamil
பதிலடி கொடுத்த ஷிகர்

பதிலடி கொடுத்த ஷிகர்

இதனால் பிசிசிஐ மீது கடும் அதிருப்தியில் இருந்த ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியர் இருவருமே தங்களது கோபத்தை சன்ரைசர்ஸ் அணியை வெளுத்து வாங்கி பதிலடி கொடுத்தனர். குறிப்பாக ஷிகர் தவானின் ஆட்டம் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது.

புள்ளிப்பட்டியல் விவரம்

புள்ளிப்பட்டியல் விவரம்

உலகின் தலைசிறந்த ஸ்பின்னராக தற்போது வலம்வந்துக்கொண்டிருக்கும் ரஷீத் கானின் ஓவரில் தவான் மற்றும் ஐயர் இருவருமே சிக்ஸர்களை விளாசி தங்களது ஃபார்மை அனைவருக்கும் உணர்த்தினர். இதனால் டெல்லி அணி சன்ரைஸ் அணியை எளிதாக வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது

Story first published: Thursday, September 23, 2021, 16:20 [IST]
Other articles published on Sep 23, 2021
English summary
Shikhar dhawan gives a massive reply for T20 worldcup squad omission in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X