வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்

மும்பை: சென்னை அணி வீரர்களுக்கு ஷிகர் தவான் தண்ணி காட்டியது டெல்லி அணிக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தொடக்கம் முதலே டெல்லி அணியின் கை ஓங்கியிருந்தது.

அந்தவகையில் டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்து தலைவலி கொடுத்தனர்.

அணி இலக்கு

அணி இலக்கு

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் 2 விக்கெட்டை இழந்த போது சுரேஷ் ரெய்னாவின் அரை சதம், சாம் கரண், மொயின் அலியின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை குவித்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனி டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

அதிரடி

அதிரடி

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் ப்ரித்வி ஷா - ஷிகர் தவான் ஜோடி தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 38 பந்துகளில் 72 ரன்களை விளாசினார். எனினும் ஷிகர் தவான் ஆட்டத்தில் தனி கவனம் பெற்றார். 54 பந்துகளை சந்தித்த அவர் 85 ரன்களை அடித்து சிஎஸ்கே பந்துவீச்சை சிதறடித்தார்.

நிரூபித்த தவான்

நிரூபித்த தவான்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது முதல் போட்டியில் 4 ரன்களை மட்டுமே எடுத்து சொதப்பியதால் ஷிகர் தவான் இனி டி20 போட்டிகளிலுக்கு செட் ஆக மாட்டார் என விமர்சிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த தொடரின் மீதம் இருந்த 4 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த போட்டியில் ஷிகர் தவானின் ஆட்டம் அவர் இன்னும் ஃபார்மில் இருக்கும் டி20 ப்ளேயர் தான் என நிரூபித்துள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ்

டெல்லி கேப்பிடல்ஸ்

தவான் மற்றும் ப்ரித்வி ஷாவின் உதவியால் டெல்லி அணி முதல் விக்கெட்டிற்கு 138 ரன்களை சேர்த்தது. பின்னர் வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 15 ரன்களும், ஸ்டோய்னிஸ் 14 ரன்களும் எடுக்க டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
shikhar Dhawan Proves he is still worthy for t20.. blast 85 to DC victory against CSK
Story first published: Saturday, April 10, 2021, 23:35 [IST]
Other articles published on Apr 10, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X