For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதே பொழப்பா போச்சு.. அவங்களால தான் எல்லாமே.. கொல்கத்தாவின் தோல்விக்கு மோர்கன் அதிரடி குற்றச்சாட்டு!

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கு பேட்டிங்கை குறை கூறியுள்ளார் கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன்.

நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

தொடையில வலி... 3 ஓவர்களை மட்டுமே போட்ட பௌலர்... போட்டியில இருந்து பாதியிலயே வெளியேற்றம் தொடையில வலி... 3 ஓவர்களை மட்டுமே போட்ட பௌலர்... போட்டியில இருந்து பாதியிலயே வெளியேற்றம்

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 133/9 ரன்கள் எடுத்துள்ளது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 134/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மீண்டும் சொதப்பல்

மீண்டும் சொதப்பல்

கொல்கத்தா அணி மீண்டும் டாப் ஆர்டரில் படு சொதப்பல் செய்தது. தொடக்க வீரர்கள் நிதிஷ் ராணா 22 ரன்கள், சுப்மன் கில் 11 ரன்களுக்கு வெளியேறினர். பின்னர் வந்த அதிரடி வீரர்கள் மோர்கன், தினேஷ் கார்த்திக், ரஸல், பேட் கம்மின்ஸ் ஆகியோர் கிறிஸ் மோரிஸின் வேகத்தில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 133 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராகுல் திரிபாதி மட்டுமே 36 ரன்கள் எடுத்தார்.

படுதோல்வி

படுதோல்வி

இதனையடுத்து குறைந்த இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி பட்லர் 5 ரன்களுக்கு அவுட்டாகி மீண்டும் சொதப்பினார். பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருக்க, கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்பாக ஆடி அணியை வெற்றி பெற செய்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சாம்சன் 41 பந்துகளில் 42 ரன்கள் அடித்தார். இதனால் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா அணி இந்த தொடரில் தொடர்ச்சியாக பெறும் 4வது தோல்வி இதுவாகும்.

 மோர்கன்

மோர்கன்

இந்நிலையில் இதுகுறித்து பேசிய கேப்டன் மோர்கன், எங்கள் அணியில் பேட்டிங் மோசமாக இருந்ததே தோல்விக்கு காரணம். இன்னிங்ஸ் முழுவதும் எங்களிடம் சிறப்பான பேட்டிங் வெளிப்படவில்லை. குறைவான ஸ்கோரை அடித்துவிட்டு பவுலர்களிடம் அதிக பிர்ஷர்களை போட முடியாது.

 பிட்ச் மோசம்

பிட்ச் மோசம்

வான்கடே மைதானம் எப்போதும் இருப்பது போன்று நேற்று இல்லை. பேட்டிங்கிற்கு சிரமமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் நாங்கள் அடித்து ஆட முயன்ற போது விக்கெட்டை இழக்கிறோம். ஆனால் ராஜஸ்தான் அணி இந்த பிட்ச்-க்கு நன்கு பழகிவிட்டனர்.

மோர்கன் குற்றச்சாட்டு

மோர்கன் குற்றச்சாட்டு

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடாமல் லோ ஆர்டரில் இருக்கும் எனக்கு, தினேஷ் கார்த்திக், ரஸலுக்கு அதிக வேலையை வைத்துவிட்டு செல்கிறார்கள். ஆனால் அது எங்களால் தொடர்ந்து செய்யமுடியாத ஒன்று. நாங்கள், அனைத்து வீரர்களும் எந்த பிரஷரும் இன்றி விளையாட வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் நேற்றைய போட்டியில் நிச்சயமாக அது இல்லை.

Story first published: Sunday, April 25, 2021, 10:18 [IST]
Other articles published on Apr 25, 2021
English summary
Skipper Eoin Morgan Explanation after KKR's 4th Straight loss in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X