For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த ஒரு தப்புதான்.. எல்லாமே சரியாதான் போச்சு.. ஆர்சிபி தோல்விக்கான முக்கிய காரணத்தை கூறிய கோலி!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி செய்த தவறு குறித்து விராட் கோலி விவரித்துள்ளது.

நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது.

3 வருட போராட்டம்.. யாருமே மதிக்கவில்லை.. ஒரே போட்டியில் தரமான பதிலடி தந்த இளம் வீரர்.. மாஸ் பின்னணி 3 வருட போராட்டம்.. யாருமே மதிக்கவில்லை.. ஒரே போட்டியில் தரமான பதிலடி தந்த இளம் வீரர்.. மாஸ் பின்னணி

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 179/5 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆர்சிபி 20 ஓவர்களில் 145/8 மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

ஆர்சிபி தோல்வி

ஆர்சிபி தோல்வி

ஆர்சிபி அணியின் தோல்விக்கு மோசமான பந்துவீச்சு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. முதலில் ரன்களை வாரி வழங்கினாலும், மிடில் ஓவர்களில் பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு தலைவலி கொடுத்து வந்தனர். ஆனால் அவை அனைத்தையும் கடைசி 4 ஓவர்களில் சொதப்பி விட்டனர். அந்த 4 ஓவர்களில் மட்டும் பஞ்சாப் அணி 53 ரன்களை விளாசியது.

சொதப்பிய பவுலர்கள்

சொதப்பிய பவுலர்கள்

குறிப்பாக ஹர்ஷல் பட்டேலின் பந்துவீச்சை கே.எல்.ராகுல் துவம்சம் செய்தார். அவர் வீசிய 18 ஓவரில் 18 ரன்களும் 20வது ஓவரில் 22 ரன்களும் விளாசித் தள்ளினார். சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியிலும் ஹர்ஷல் பட்டேல் கடைசி ஓவரில் 37 ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு வழிவகுத்தது.

காரணம்

காரணம்

இந்நிலையில் இதுகுறித்து பேசிய கோலி, பஞ்சாப் அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றபோதும் நாங்கள் மீண்டும் கம்பேக் கொடுத்தோம். 160 என்ற இலக்கிற்குள் சுருட்டி இருக்க வேண்டும். ஆனால் கடைசி ஓவர்களில் 25 ரன்கள் அதிகமாக போய்விட்டன. முதலில் திட்டமிட்டபடி நடந்த எல்லாம் இறுதியில் சொதப்பியது.

பேட்டிங் சரியில்லை

பேட்டிங் சரியில்லை

பேட்டிங்கை பொறுத்தவரை நாங்கள் தொடக்கம் முதல் அடிக்க பார்த்தோம். ஆனால் அங்கு லைனில் சரிபார்த்து அடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. இலக்கை துரத்தும் போது பார்ட்னர்ஷிப் அமைத்து பவுண்டரிகளை தொடர்ந்து அடிக்க வேண்டும். பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்டை 110க்கு கீழ் போகாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் அதை செய்யவில்லை. உண்மையை கூற வேண்டும் என்றால் அவர்களின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. தொடர்ந்து பிரஷர் கொடுத்தனர்.

Story first published: Saturday, May 1, 2021, 15:03 [IST]
Other articles published on May 1, 2021
English summary
Skipper Kohli reveals where it all went wrong for RCB against PBKS Match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X