மரணப்படுக்கையில் இருந்து கொண்டு ஐபிஎல் பார்ப்பீர்களா? விளாசிய ஆர்சிபி வீரர்.. வெளியேற இதுதான் காரணம்

சென்னை: உங்கள் வீட்டில் ஒருவர் உயிருக்கு போராடும் போது நீங்கள் ஐபிஎல் பார்க்கும் மனநிலையிலா இருப்பீர்கள் என்று ஆஸ்திரேலிய வீரர் ஆடம் சாம்பா கேள்வி எழுப்பி உள்ளார்.

2021 ஐபிஎல் தொடரில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் வரிசையாக வெளியேறி வருகிறார்கள். இந்தியாவில் பரவி வரும் கொரோனா கேஸ்களை காரணம் காட்டி பாதியில் தொடரில் இருந்து இவர்கள் வெளியேறி வருகிறார்கள்.

ரிஷப்பை மீண்டும் உசுப்பேற்றும் முன்னாள் வீரர்கள்... கேப்டனாகும் திறமை அதிகமாக உள்ளதாக பாராட்டு

பெங்களூர் அணியில் இருந்து கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் சாம் ஆகியோர் வெளியேறி உள்ளனர். இந்த நிலையில் தனது முடிவு குறித்து ஆடம் சாம்பா தற்போது பேட்டி அளித்துள்ளார்.

ஆடம் சாம்பா

ஆடம் சாம்பா

ஆடம் சாம்பா அளித்துள்ள பேட்டியில், நான் கடந்த சில மாதங்களாக நிறைய பயோ பபுளில் இருந்துள்ளேன். அதை வைத்து சொல்கிறேன், இந்த ஐபிஎல் பயோ பபுள் அவ்வளவு பாதுகாப்பாக இல்லை. நாங்கள் இந்தியாவில் இருக்கிறோம். இப்போது சுத்தத்தை பற்றி பேச வேண்டும்.

தூய்மை

தூய்மை

இங்கு தூய்மை எப்படி கடைபிடிக்கப்படுகிறது என்று பேச வேண்டும். நாங்கள் இன்னும் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். துபாயில் ஐபிஎல் நடந்தது. அங்கு பயோ பபுள் சிறப்பாக இருந்தது. ஆனால் இங்கு அப்படி இல்லை.

துபாய்

துபாய்

இந்த ஐபிஎல்லும் துபாயில் நடந்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது. அங்கு பாதுகாப்பாக இருந்தோம். அந்த பாதுகாப்பை இப்போது உணர முடியவில்லை. இங்குதான் டி 20 உலகக் கோப்பை நடக்க போகிறது. இதுவும் கண்டிப்பாக விவாத பொருளாக மாறும்.

 டி 20 கோப்பை

டி 20 கோப்பை

இன்னும் 6 மாதத்தில் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பை தொடர் கண்டிப்பாக சர்ச்சையாகும். ஆனால் இதற்கு பின் நிறைய அரசியல் உள்ளது. இந்தியாவில் கொரோனா நிலைமை மோசமாக உள்ளது. என் மன அமைதி எனக்கு முக்கியம். என்னால் கிரிக்கெட் மீது கவனம் செலுத்த முடியவில்லை.

 கிரிக்கெட்

கிரிக்கெட்

நிறைய பேர் கிரிக்கெட் பார்த்தால் கொரோனாவிற்கு இடையே நிம்மதியாக இருக்கலாம் என்கிறார்கள். உங்கள் வீட்டில் ஒருவர் மரணப்படுக்கையில் இருந்தால் கிரிக்கெட் பார்க்க முடியுமா? ஒருவர் உங்கள் வீட்டில் உயிருக்கு போராடினால் ஐபிஎல் பார்க்கும் மனநிலை இருக்குமா? இதுவும் கூட நான் பாதியில் வெளியேற காரணம் என்று ஆஸ்திரேலிய வீரர் ஆடம் சாம்பா தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: Someone who has family member in death bed wont worry about cricket says Adam Zampa on leaving the season.
Story first published: Wednesday, April 28, 2021, 14:50 [IST]
Other articles published on Apr 28, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X