ஷாக்.. இன்றும் 2 வீரர்களுக்கு கொரோனா.. திடீரென ரத்து செய்யப்பட்ட ஐபிஎல் தொடர்.. என்ன நடந்தது?

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் ஆடி வரும் அமித் மிஸ்ரா, சாகாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு.. IPL 2021 மொத்தமாக நிறுத்தம்

இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் வெளிநாட்டு வீரர்கள் பலர் வரிசையாக ஐபிஎல் தொடரை ஒரு பக்கம் புறக்கணித்து வெளியேறுகிறார்கள். முக்கியமாக ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் தாயகம் திரும்பி கொண்டு இருக்கிறார்கள்.

45 நிமிடம்.. அப்படியே கதிகலங்கிய சிஎஸ்கே.. தோனி தந்த அட்வைஸ்.. வெற்றிக்கு பின் இருக்கும் 5 காரணங்கள்

இந்த நிலையில் தற்போது இந்திய வீரர்கள் பலருக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கொரோனா

கொரோனா

2021 ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலேயே படிக்கல், அக்சர் பட்டேல் போன்ற வீரர்களுக்கு கொரோனா வந்தது. இதில் படிக்கல் குணமடைந்து அணியில் இணைந்துவிட்டார். இன்னும் அக்சர் பட்டேல் டெல்லி அணியில் முழுமையாக இணையவில்லை.

 கொல்கத்தா

கொல்கத்தா

இதையடுத்து நேற்று வருண் சக்ரவர்த்தி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். காலில் ஸ்கேன் எடுக்க மருத்துவமனை சென்ற வருண் சக்ரவர்த்தி, தன்னை தனிமைப்படுத்தாமல் அணியில் இணைந்தார். இதனால் இவருக்கு கொரோனா ஏற்பட்டது.

 வீரர்

வீரர்

கொல்கத்தா வீரர் வருண் சக்ரவர்த்தியால் இன்னொரு வீரர் சந்தீப் வாரியாருக்கு கொரோனா ஏற்பட்டது. இதனால் நேற்று நடக்க வேண்டிய கொல்கத்தா - பெங்களூர் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இன்னொரு பக்கம் சிஎஸ்கே பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி உட்பட 5 பேருக்கு அணியில் கொரோனா ஏற்பட்டது.

மோசம்

மோசம்

இப்போது அடுத்த அதிர்ச்சியாக டெல்லி அணியின் அமித் மிஸ்ரா கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதேபோல் ஹைதராபாத் அணியில் விர்த்திமான் சாகா கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை ஆட வேண்டிய நிலையில் இந்த கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சந்தேகம்

சந்தேகம்

கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை, டெல்லி என்று அடுத்தடுத்து ஒவ்வொரு அணியிலும் கொரோனா ஏற்பட்டு வருகிறது. வெறும் 4 நாட்களில் பலருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த தொடரில் மேலும் போட்டிகள் நடக்குமா, ஐபிஎல் தொடருமா என்று கேள்வி எழுந்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: SRH batsman Saha and DC spinner Amit Mishra got Covid - 19 positive today.
Story first published: Tuesday, May 4, 2021, 13:08 [IST]
Other articles published on May 4, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X