For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நடராஜன் இல்லைனா என்ன இப்போ?.. பிரச்னையே இல்ல.. ஐதராபாத் அணி பயிற்சியாளரின் பேச்சால் ரசிகர்கள் கோபம்!

துபாய்: ஐதராபாத் அணியில் டி.நடராஜன் இல்லையென்றாலும் எங்களுக்கு கவலை இல்லை என்பது போல பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 33-ஆவது போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் பின்னர் விளையாடிய டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மறக்க முடியுமா இந்த நாளை?. 6 பந்தில் 6 சிக்ஸர்.. வெறித்தனமாக வேட்டையாடிய யுவராஜ்.. ப்பா.. என்னா அடி மறக்க முடியுமா இந்த நாளை?. 6 பந்தில் 6 சிக்ஸர்.. வெறித்தனமாக வேட்டையாடிய யுவராஜ்.. ப்பா.. என்னா அடி

 நடராஜனுக்கு கொரோனா

நடராஜனுக்கு கொரோனா

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே ஐதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதற்கு காரணம் தமிழக வீரர் டி.நடராஜன். நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய நடராஜனுக்கு கொரோனா உறுதியானது. இதனால் நடராஜனும் அவருடன் தொடர்பில் இருந்து விஜய் சங்கரும் நேற்றைய போட்டியில் பங்குபெறவில்லை.

படுதோல்வி

படுதோல்வி

இதன் காரணமாக பந்துவீச்சில் ஐதராபாத் அணி திணறியது. 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி வழக்கம் போல தொடக்கத்தில் இருந்தே தனது அதிரடியை காட்டியது. தொடக்க வீரர் ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரும் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இவர்களை எந்த பவுலராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவே டி.நடராஜன் விரைவாக அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர்.

பயிற்சியாளர்

பயிற்சியாளர்

இந்நிலையில் இதுகுறித்து அணி பயிற்சியாளர் ட்ரேவர் பெய்லிஷ் பேசியுள்ளார். அதில் அவர், நடராஜன் இல்லாததால் தான் ஐதராபாத் அணி தோற்றது என்பதை நான் ஏற்கமாட்டேன். அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் துரதிஷ்டவசமானது. டெல்லி அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. உலக தரம் வாய்ந்த பவுலர்களை அவர்கள் வைத்திருந்தனர்.

மீண்டு வருவோம்

மீண்டு வருவோம்

நடராஜன் ஒருநாள் விளையாடுவார். ஆனால் தற்போது இருக்கும் வீரர்களும் சிறப்பானவர்களே. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் காயம் காரணமாக மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். அதனை இந்த அணி எளிதாக கடந்து செல்லும். வேகப்பந்துவீச்சாளர் டி.நடராஜன் விரைவில் குணமடைந்து வருவார். ஐதராபாத் அணி மீண்டு வரும் எனத் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, September 23, 2021, 22:28 [IST]
Other articles published on Sep 23, 2021
English summary
SRH Head Coach Trevor Bayliss opened up on Nattarajan impact on game in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X