எவ்வளவு திமிர்.. அவரை ஓரம்கட்டிட்டு இப்ப போய் புலம்பினா எப்படி? வார்னரை வறுத்தெடுக்கும் பேன்ஸ்!

சென்னை: கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இன்று ஹைதராபாத்தில் ஓப்பனிங் வீரர்கள் மோசமாக ஆடினார்கள்.

கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அதிரடியாக ஆடி 20 ஓவருக்கு 187/6 ரன்கள் எடுத்துள்ளது.

ஹைதராபாத்திற்கு கொல்கத்தா 188 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது. இன்று பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில் பிரைஸ்டோ, மணீஷ் பாண்டே மட்டுமே கொஞ்சம் நன்றாக ஆடினார்.

அவுட்

அவுட்

இதையடுத்து பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. ஓப்பனிங் வீரர்கள் வார்னர், விஹாரி இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய பிரைஸ்டோ, மனிஷ் பாண்டேதான் கொஞ்சம் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

மோசம்

மோசம்

முக்கியமாக பிரைஸ்டோ நன்றாக பேட்டிங் செய்த 55 ரன்கள் எடுத்தார். ஆனால் பிரைஸ்டோ, பாண்டேவுக்கு அடுத்து ஹைதராபாத் அணியில் பேட்டிங் செய்ய பெரிய அளவில் வீரர்கள் யாரும் இல்லை. விஜய் சங்கர் பல நாட்களாக கிரிக்கெட் ஆடாமல் பார்மில் இல்லை. விஜய் சங்கர், நபி ஆகியோர் கடைசி வரை நின்று ஆடும் வீரர்கள் இல்லை.

ஆர்டர் எப்படி

ஆர்டர் எப்படி

இன்று கேன் வில்லியம்சனை அணியில் எடுக்காத காரணத்தால் ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் மிகவும் வீக்காக இருந்தது. மணீஷ் பாண்டேவுக்கு பின் அதிரடியாக ஆட கூடிய, ஆட்டத்தை பினிஷ் செய்ய கூடிய வீரர்கள் யாருமே இல்லை. இன்று நபி போன்ற வீரர்களை எடுத்ததற்கு பதிலாக கேன் வில்லியம்சனை எடுத்து இருக்கலாம்.

சரியில்லை

சரியில்லை

கேன் வில்லியம்சன் இல்லாமல் இன்று ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் மோசமாக திணறியது. முழுக்க முழுக்க வார்னரின் அணி தேர்வுதான் இன்று தவறாக இருந்தது. ஒப்பனர்கள் சரிந்த பின்புதான் வார்னர் தான் செய்த தவறை உணர்ந்திருப்பார். மணீஷ் பாண்டே சிறப்பாக ஆடினாலும் போட்டியை முடிக்கும் அளவிற்கு ஹைதராபாத் அணியில் யாரும் இல்லை.

வில்லியம்சன்

வில்லியம்சன்

கேன் வில்லியம்சனை அணியில் எடுக்காததை ஹைதராபாத் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். வில்லியம்சன் இருந்திருந்தால் பயப்படாமல் ஒப்பனர்கள் ஆடலாம். விக்கெட் விழுந்தாலும் கவலைப்பட வேண்டியது இல்லை. ஆனால் வார்னர் ஹைதராபாத் அணி தேர்வில் தவறு செய்துவிட்டார் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: SRH middle order was not so strong against KKR today in Chepauk
Story first published: Sunday, April 11, 2021, 22:39 [IST]
Other articles published on Apr 11, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X