For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏன் இவ்வளவு லேட்.. கோபமாக கத்திய வார்னர்.. தீயாக ஆடிய ஹைதராபாத்.. பஞ்சாப்பை காலி செய்த கதை!

சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிராக ஹைதராபாத் வீரர்கள் எல்லோரும் இன்று பொறுப்போடு பேட்டிங் மற்றும் பீல்டிங் செய்தனர்.

ஹைதராபாத்துக்கும் பஞ்சாப்பிற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது.இதில் தொடக்கத்தில் இருந்தே ஹைதராபாத் அணி ஆதிக்கம் செலுத்தியது.

ஹைதராபாத் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 120 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஹைதராபாத்திற்கு பஞ்சாப் 121 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

பேட்டிங்

பேட்டிங்

கடந்த மூன்று போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைந்த ஹைதராபாத் அணி இன்று மிகவும் நம்பிக்கையோடு களமிறங்கியது. மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்ததற்கான அடையாளமே அந்த அணியிடம் இல்லை. தொடக்கத்தில் இருந்தே ஹைதராபாத் முழு திட்டத்தோடு வந்திருந்தது.

வார்னர்

வார்னர்

முக்கியமாக வார்னர் மிகவும் கண்டிப்புடன் காணப்பட்டார். மணீஷ் பாண்டே, சமத் என்று பல வீரர்களை நீக்கி அணி தேர்வில் அசத்தினார். அது போக ஹைதராபாத் அணியின் மூத்த வீரர்கள் எல்லோரும் இன்று களத்தில் தரமாக திட்டங்களை வகுத்தனர்.

வார்னர் பீல்டிங்

வார்னர் பீல்டிங்

வார்னர் பவுண்டரி லைனில் பீல்டிங் செய்த போது பிரைஸ்டோ, கேன் வில்லியம்சன் திட்டங்களை வகுத்தனர். அவர்கள் இல்லாத பொத்து புவனேஷ்குமார் திட்டங்களை வகுத்தார். எல்லா வீரரும் இன்று களத்தில் தீயாக வேலை செய்தனர். லேட்டாக பீல்டிங் செய்ய வந்த மாற்று வீரரை கூட ஏன் லேட்டா வந்தீங்க என்று வார்னர் திட்டும் அளவிற்கு இன்று களத்தில் ஹைதராபாத் வீரர்கள் துடிப்புடன் காணப்பட்டனர்.

ஸ்பின்

ஸ்பின்

டாசில் தோல்வி அடைந்தாலும் சென்னை ஸ்பின் பிட்சை ஹைதராபாத் அணி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. ரஷீத் கான், அபிஷேக் சர்மாவை வைத்து பஞ்சாப் வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்த்த் வார்னர், கலீல் அகமதை வைத்து இன்னொரு பக்கம் விக்கெட்டுகளை எடுத்தார். இங்குதான் பஞ்சாப் சுருண்டது.

சிறப்பு

சிறப்பு

இது போக பேட்டிங்கிலும் முதல் ஓவரில் இருந்தே வார்னர் அதிரடி காட்டினார். மெதுவாக ஆடினால் கடைசியில் அவுட் ஆகிவிடுவோம். சேஸ் செய்ய முடியாது என்பதை உணர்ந்து பவர்பிளேவிலேயே வெளுத்து வாங்கினார்கள். முதல் 6 ஓவருக்கே அந்த அணி 50 ரன்களை விக்கெட்டுகளை இழக்காமல் எடுத்துவிட்டது.

கம்பேக்

கம்பேக்

மொத்தமாக பேட்டிங் பவுலிங் இரண்டிலும் ஹைதராபாத் இன்று சிறப்பாக ஆடியது. அதிலும் வார்னரின் பவுலிங் ரொட்டேஷன், பீல்டிங் செட்டப் என்று திட்டமிடல் சிறப்பாக இருந்தது. 3 போட்டிகளில் தோல்வி அடைந்த ஹைதராபாத் இன்றுதான் முழுமையாக திரும்பி வந்து கம்பேக் கொடுத்துள்ளது

Story first published: Wednesday, April 21, 2021, 18:24 [IST]
Other articles published on Apr 21, 2021
English summary
IPL 2021: SRH plays with intent and plan against Punjab today
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X