For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுக்கு மேல பொறுக்க கூடாது.. இவரை எதுக்கு டீம்ல வச்சு இருக்கீங்க? இளம் வீரருக்கு செம செக்.. பின்னணி

சென்னை: ஹைதராபாத் அணியின் இளம் வீரர் மணீஷ் பாண்டேவை உடனே அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

மும்பைக்கு எதிராக விறுவிறுப்பாக நடந்த ஐபிஎல் போட்டியில் நேற்று ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது. முதல் 6 ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி அதன்பின் மோசமாக சொதப்பி தோல்வியை தழுவியது .

முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை 20 ஓவருக்கு 150/5 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 137 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி தோல்வி அடைந்தது.

தோல்வி

தோல்வி

இதுவரை மூன்று போட்டிகளில் ஆடி மூன்றிலும் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த மூன்று போட்டியிலும் ஹைதராபாத் அணி தோல்வி அடைய அந்த அணியின் இளம் வீரர் மணீஷ் பாண்டே காரணமாக இருந்தார். முதல் இரண்டு போட்டியில் இவர் நன்றாகவே ஆடினார்.

ஆட்டம்

ஆட்டம்

சிறப்பாக ஆடி இரண்டு அரைசதம் எடுத்தார். நேற்று போட்டியில் மட்டுமே இவர் மோசமாக ஆடி வெறும் 2 ரன்களுக்கு அவுட் ஆனார். ஆனால் இவர் என்னதான் அரைசதம் எடுத்தாலும் கூட மறைமுகமாக ஹைதராபாத் அணியின் தோல்விக்கு காரணமாக இருந்துள்ளார். இவரின் ஸ்டிரைக் ரேட்தான் இதற்கு காரணம்.

காரணம்

காரணம்

மிக மெதுவாக இன்னிங்ஸ் ஆடுவது, ஒரு பாலுக்கு ஒரு ரன் என்று 100 ஸ்டிரைக் ரேட் வைத்து இருப்பதுதான் இவரின் தவறு. இவர் நிறைய பந்துகளை குடித்துவிட்டு அவுட்டாகி விடுவதால், இவருக்கு பின் களமிறங்கும் மிடில் ஆர்டர் வீரர்களுக்கு பிரஷர் அதிகமாக இருக்கிறது. அதனால் அவர்கள் அடித்து ஆட முயற்சித்து அவுட் ஆகி விடுகிறார்கள்.

அவுட்

அவுட்

ஒன் டவுன் இறங்கும் மணீஷ் பாண்டே சிக்ஸ், பவுண்டரி அடிக்க முடியாமல் திணறுகிறார். சிங்கிள்ஸ் மட்டுமே எடுத்து சொதப்பி வருகிறார். வார்னர் அல்லது பிரைஸ்டோ அதிரடியாக தொடக்கம் கொடுத்தால், அதை தொடராமல் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடி வருகிறார்.

மணீஷ் பாண்டே

மணீஷ் பாண்டே

அதிரடியாக ஆட முயன்றாலும் நேற்று மேட்ச் போல மணீஷ் அவுட் ஆகி விடுகிறார். இதனால் இனிமேலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது. இனி வரும் போட்டிகளில் இவரை ஆடும் அணியில் எடுக்க கூடாது. வேறு ஒரு வீரரை ஒன் டவுன் இறக்க வேண்டும் ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இவர் மேட்ச் வின்னர் கிடையாது.. இனியும் இவரை நம்ப கூடாது என்று விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

Story first published: Sunday, April 18, 2021, 14:17 [IST]
Other articles published on Apr 18, 2021
English summary
IPL 2021: SRH should go for a power hitter at one down instead of Manish Pandey
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X