For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நேற்று நடந்த மாதிரியே பாதியில் மாறிய ஆட்டம்.. அசத்திய ஆர்சிபி பவுலிங்.. ஹைதராபாத் அதிர்ச்சி தோல்வி!

சென்னை: ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் திரில் வெற்றிபெற்றுள்ளது.

2021 ஐபிஎல் தொடர் எதிர்பார்த்ததை விட மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஓவ்வொரு போட்டியும் கடைசி ஓவர் வரை பரபரப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. இன்றும் பெங்களூருக்கும் ஹைதராபாத்திற்கும் இடையிலான போட்டி சென்னையில் விறுவிறுப்பாக நடந்தது.

இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 20 ஓவருக்கு 8 விக்கெட்டை இழந்து 149 எடுத்தது. இதையடுத்து பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து வெறும் 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றிபெற்றுள்ளது.

விறுவிறுப்பு

விறுவிறுப்பு

நேற்று சென்னையில் போட்டி நடந்த அதே சேப்பாக்கம் பிட்சில்தான் இன்றும் மேட்ச் நடக்கிறது. நேற்றே இரண்டாவது இன்னிங்சில் பிட்ச் ஸ்பின் செய்ய சாதகமாக மாறியது. நேற்று ஸ்பின் பவுலர்கள் இரண்டாவது இன்னிங்சில் அதிக அளவில் விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் இன்று சென்னை பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்

டாஸ்

இன்று பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி மற்ற அணிகளை போல பவுலிங் தேர்வு செய்துள்ளது. நேற்று சென்னையில் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்த கொல்கத்தா தோல்வி அடைந்த போதும் ஹைதராபாத் துணிச்சலாக சேஸ் செய்ய முடிவு செய்துள்ளது.

அணி விவரம்

அணி விவரம்

இன்று பெங்களூர் அணியில் படிக்கல் மீண்டும் சேர்ந்துள்ளார். இன்று ஆடும் பெங்களூர் அணியில் படிக்கல், கொலை, ஷாபாஸ் அகமது, மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ், வாஷிங்க்டன் சுந்தர், டேனியல் கிறிஸ்டின், கைலி ஜெமிசன், ஹர்ஷல் பட்டேல், சிராஜ். சாஹல் ஆகியோர் ஆடுகிறார்கள்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

இன்று ஆடும் ஹைதராபாத் அணியில் சாகா, டேவிட் வார்னர், மனிஷ் பாண்டே, ஜானி பிரைஸ்டோ, விஜய் சங்கர், ஜேசன் ஹோல்டர், அகமது சமத், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சபாஷ் நதீம், நடராஜன் ஆகியோர் ஆடுகிறார்கள்.

பேட்டிங்

பேட்டிங்

இதையடுத்து பேட்டிங் இறங்கிய பெங்களூர் தொடக்கத்திலேயே படிக்கல் விக்கெட்டை இழந்தது. பின் பேட்டிங் இறங்கிய சபாஷ் அகமதும் 14 ரன்களுக்கு அவுட் ஆனார். கொஞ்சம் அதிரடியாக ஆடிய கோலி 33 ரன்களுக்கு அவுட் ஆன பின் பெங்களூர் அணி திணறியது. ஏபிடி வில்லியர்ஸ் 1, சுந்தர் 8, டேனியல் 1 ரன்களுக்கு அவுட் ஆனார்கள்.

மேக்ஸ்வெல்

மேக்ஸ்வெல்

சிறப்பாக பவுலிங் செய்த ரஷீத் 2 விக்கெட், ஹோல்டர் 2 விக்கெட், நடராஜன், புவி, சபாஷ் தலா 1 விக்கெட் எடுத்தனர். பெங்களூர் அணியில் ஒரு பக்கம் மேக்ஸ்வெல் மட்டும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தார். ஹைதராபாத்திற்கு எதிராக பெங்களூர் 20 ஓவருக்கு 8 விக்கெட்டை இழந்து 149 எடுத்துள்ளது. ஹைதராபாத்திற்கு பெங்களூர் 150 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது

அவுட்

அவுட்

இதையடுத்து பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் தொடக்கத்தில் அதிரடியாக ஆடியது. வார்னர் 54, மணீஷ் பாண்டே 38 ரன்கள் எடுத்தனர். ஆனால் அதன்பின் வந்த வீரர்கள் எல்லோரும் மோசமாக ஆடி அவுட் ஆனார்கள். நேற்று மும்பை கொல்கத்தா இடையிலான போட்டியில் நடந்ததை போலவே இன்றும் பாதிக்கும் மேல் போட்டி மாறியது. முக்கியமாக சபாஷ் அஹமது ஒரே ஓவரில் 3 விக்கெட் எடுத்தார்.

வெற்றி

வெற்றி

சபாஷ் அகமது வீசிய 17வது ஓவரில் பிரைஸ்டோ, மணீஷ் பாண்டே, அப்துல் சமத் அவுட் ஆனார்கள். இந்த ஓவரிலேயே போட்டி மாறிவிட்டது. அதற்கு அடுத்த ஓவரிலேயே விஜய் சங்கரும் அவுட் ஆக வரிசையாக ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து பேட்டிங் ஹைதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து வெறும் 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றிபெற்றுள்ளது.

Story first published: Wednesday, April 14, 2021, 23:14 [IST]
Other articles published on Apr 14, 2021
English summary
IPL 2021: SRH wins the toss and chooses to bowl against RCB in Chennai chepauk
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X