For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் ஐபிஎல்? பிசிசிஐக்கு கிடைத்த புதிய வாய்ப்பு... தோள்கொடுத்த அண்டை நாடு!

டெல்லி: ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளை இந்தாண்டே நடத்த பிசிசிஐக்கு சூப்பர் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.

Recommended Video

IPL 2021 நடத்த England Counties ஆர்வம்! | OneIndia Tamil

கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக 14வது ஐபிஎல் தொடர் தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எப்படியாவது ஐபிஎல் 2021 தொடரை நடத்தியே ஆகணும்.... இல்லன்னா ரூ.2500 கோடி காலி.. கங்குலி பதறல்! எப்படியாவது ஐபிஎல் 2021 தொடரை நடத்தியே ஆகணும்.... இல்லன்னா ரூ.2500 கோடி காலி.. கங்குலி பதறல்!

இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் தடைபட்டுள்ளன.

வருவாய் இழப்பு

வருவாய் இழப்பு

ஐபிஎல் தொடர் மூலம் ஆண்டு தோறும் பிசிசிஐக்கு சுமார் ரூ.4000 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால் இந்தாண்டு மீதமுள்ள பாதி தொடரை நடத்தி முடிக்காவிட்டால் சுமார் ரூ. 2500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் போட்டிகளை நடத்த விரைவில் வேறு இடம் பார்க்கப்படும் எனவும் பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார்.

இலங்கை விருப்பம்

இலங்கை விருப்பம்

இதற்காக ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து நாடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரை இலங்கையில் நடத்திக்கொள்ளலாம் என செப்டம்பரில் மைதானங்கள் ஒதுக்கப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதனை இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

தயார் நிலையில் மைதானம்

தயார் நிலையில் மைதானம்

இதுகுறித்து பேசியுள்ள அவர், ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த பிசிசிஐயின் தேர்வில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது என்பது தெரியும். ஆனால் போட்டிகள் இலங்கையில் நடத்த முடியாது எனக்கூற எந்த காரணமும் கூறமுடியாது. இலங்கையில் வரும் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் வரை லங்கா ப்ரீமியர் லீக் ( LPL) தொடர் நடத்த திட்டமிட்டு வருகிறோம். எனவே செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் தொடரை நடத்திக்கொள்ள மைதானங்கள் மற்றும் இதர விஷயங்கள் தயார் நிலையில் இருக்கும்.

பிசிசிஐ குழப்பம்

பிசிசிஐ குழப்பம்

அர்ஜுன டி சில்வாவின் இந்த தெரிவித்துள்ளதை நம்பி பிசிசிஐ-ம் தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்காது என தெரிகிறது. ஏனென்றால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் தேர்தல் வரும் மே 20ம் தேதி நடைபெறுகிறது. எனினும் புதிய உறுப்பினர் குழு பதவிக்கு வந்தாலும், ஐபிஎல் குறித்து இதே நிலைப்பாட்டை தான் எடுக்கும் எனக்கூறப்படுகிறது.

Story first published: Friday, May 7, 2021, 22:12 [IST]
Other articles published on May 7, 2021
English summary
Sri Lanka Cricket Proposed BCCI to host remaining 31 matches in September
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X