For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி எப்படி ஐபிஎல் நஷ்டமாகும்.. ஸ்டார் ஸ்போர்ட்ஸின் ஒற்றை அறிவிப்பு.. குஷியில் முதலீட்டாளார்கள்!

மும்பை: ஐபிஎல் நிறுத்தப்பட்டதால் பாதிப்படைந்திருக்கும் ஸ்பான்சர்கள், விளம்பரதாரர்களுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக 14வது ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் நடக்க வாய்ப்பே இல்ல.. சாத்தியக்கூறுகளை உடைத்து வைத்த முன்னாள் வீரர்.. இதுதான் காரணம்! ஐபிஎல் நடக்க வாய்ப்பே இல்ல.. சாத்தியக்கூறுகளை உடைத்து வைத்த முன்னாள் வீரர்.. இதுதான் காரணம்!

இதனால் பிசிசிஐக்கும், முதலீட்டாளர்களுக்கும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என கூறப்பட்டு வருகிறது.

போட்டிகள் பாதிப்பு

போட்டிகள் பாதிப்பு

ஐபிஎல் தொடரை ஒளிபரப்பு செய்யும் உரிமையை 2018 - 2022ம் ஆண்டு காலகட்டத்திற்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்காக 5 ஆண்டுகளுக்கு சேர்த்து ரூ.16,348 கோடி ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன் படி ஒரு போட்டிக்கு ரூ.54.5 கோடி ஆகும். ஆனால் இந்தாண்டு 60 போட்டிகளில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது.

சலுகை

சலுகை

இதனால் விளம்பரதாரர்கள் மற்றும் ஸ்பான்ஸர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளுக்கான தொகையை மட்டும் கொடுத்தால் போதும் எனவும் மொத்த தொகையும் செலுத்த தேவை இல்லை என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அறிவிப்பு

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அறிவிப்பு

அதே போல மீண்டும் இந்த தொடர் தொடங்கும் போது முதலீட்டாளர்கள் தங்களது ஒப்பந்தத்தை போட்டுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும், மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் போது முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விரும்பவில்லை என்றால் வெளியேறிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பான்சர்கள்

ஸ்பான்சர்கள்

2021ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த 18 நிறுவனங்கள் ஸ்பான்ஸர் செய்துள்ளது. இணையதளம் மூலம் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஹாட் ஸ்டார் நிறுவனத்தில் 14 நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, May 9, 2021, 17:28 [IST]
Other articles published on May 9, 2021
English summary
Star Sports Announcement makes Sponsers and Advertisers Happy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X