For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி விதைத்த விதை... இனி மற்ற வீரர்களுக்கும் உதவும்.. புகழ்ந்து தள்ளும் கவாஸ்கர்

சென்னை: ஆர்சிபி கேப்டன் விராட் கோலி படைத்துள்ள மிகப்பெரும் சாதனை குறித்து முன்னாள் வீரர் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி யாராலும் தோற்கடிக்க முடியாத அணியாக அசுர பலத்தில் உள்ளது.

என்ன மனுஷன் யா..மோரிஸ் சொன்ன அந்த வார்த்தைகள்..வெற்றி கூட முக்கியமில்லை. பாராட்டி தள்ளும் ரசிகர்கள் என்ன மனுஷன் யா..மோரிஸ் சொன்ன அந்த வார்த்தைகள்..வெற்றி கூட முக்கியமில்லை. பாராட்டி தள்ளும் ரசிகர்கள்

அதே வேளையில் ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலியும் ஐபிஎல்-ல் இதுவரை எந்த வீரரும் செய்திராத புதிய சாதனையை படைத்துள்ளார்.

 கோலி சாதனை

கோலி சாதனை

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 47 பந்துகளில் 72* ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 6000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இதுவரை 196 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 6,021 ரன்கள் விளாசியுள்ளார். இதற்காக முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கவாஸ்கர்

கவாஸ்கர்

அந்தவகையில் இதுகுறித்து பேசிய கவாஸ்கர், விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இது மற்ற வீரர்களுக்கு ஒரு தூண்டுகோல் ஆகும். தற்போது மற்ற வீரர்களும் 6000 ரன்களை எடுத்து சாதிக்க வேண்டும் என நினைப்பார்கள். குறிப்பாக இதுவரை 5000 ரன்களை கடந்துள்ள சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா ஆகியோர் அடுத்ததாக 6000 ரன்களை நோக்கி செல்வார்கள். ஏனென்றால் நம். 1 வீரராக இருக்க வேண்டும் என்றால் அதை செய்ய வேண்டும்.

பொறுமை

பொறுமை

விராட் கோலி இந்த சாதனை செய்தவிதமும் பாராட்டுக்குரியது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் படிக்கல் சிறப்பாக ஆடினார். இதனால் அவருக்கு ஏற்றவாறு, விராட் கோலி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து பொறுமையாக ஆடினார். ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் என்பது இப்படி தான் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி அணி

ஆர்சிபி அணி

விராட் கோலி பேட்டிங் மற்றும் அல்லாமல் கேப்டன்சியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி நான்கிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த அணி அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது. புள்ளிப்பட்டியலில் முதல் 2 அணிகள் மோதும் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Story first published: Sunday, April 25, 2021, 16:42 [IST]
Other articles published on Apr 25, 2021
English summary
Sunil Gavaskar Lauds RCB Skipper After Reaching 6,000 Runs
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X