For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

‘சூப்பர் சண்டே’.. ரசிகர்களுக்கு இன்று செம விருந்து.. புள்ளிப்பட்டியலை மாற்றும் 3 ‘தலை’களின் ஆட்டம்!

அமீரகம்: ஐபிஎல் தொடரில் இன்றைய நாள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சரவெடி விருந்தாக அமைந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய ஐபிஎல் தொடரின் 2ம் பகுதி தற்போது விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது.

ப்ளே ஆஃப் வாய்ப்புக்கான போட்டிகள் அதிகரித்துள்ள சூழலில் இன்று டபுள் ஹெட்டர்ஸ் லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதல் ஆட்டம்

முதல் ஆட்டம்

இன்று நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. என்னதான் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் டாப் இடத்தில் இருந்தாலும், இது மிக முக்கிய போட்டியாக மாறவிருக்கிறது.

மிக முக்கிய போட்டி

மிக முக்கிய போட்டி

இந்தியாவில் சொதப்பலாக ஆடி வந்த கொல்கத்தா அணி அமீரகத்தில் ருத்ர தாண்டவம் காட்டி வருகிறது. இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அவர்களின் பேட்டிங், பவுலிங் என அனைத்தும் பலமாக உள்ளது. இதே போல சிஎஸ்கே அணியும் இந்தாண்டு ஐபிஎல்-ல் கெத்து காட்டி வருகிறது. புள்ளிப்பட்டியலில் டெல்லி அணியும் - சிஎஸ்கேவும் மாறி மாறி முதலிடத்தை பிடித்து வருகின்றன. இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்தை பிடித்துவிடும். அதே போல கொல்கத்தா வெற்றி பெற்றால் ஆர்சிபி அணியை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தை பிடித்துவிடும்.

சரவெடி ரெடி

சரவெடி ரெடி

போட்டி நடைபெறும் அபுதாபி மைதானமானது ஓரளவிற்கு நல்ல பவுண்டரிகள் செல்லக்கூடியதாக உள்ளது. சராசரியாக இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி 160+ ரன்கள் எடுத்து வருகின்றன. சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளின் பேட்டிங் மிகவும் அதிரடியானது என்பதால் 180+ ரன்கள் வருவதற்கு கூட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே ரசிகர்களுக்கு முதல் விருந்தே சரவெடி தான்.

ஆர்சிபி - மும்பை

ஆர்சிபி - மும்பை

இதே போல இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கோலியின் ஆர்சிபி அணிகள் மோதவிருக்கின்றன. இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு துபாய் மைதானத்தில் தொடங்கவிருக்கிறது. இரு அணிகளுக்குமே இது முக்கியமான போட்டி. ஏனென்றால் புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் 4வது இடத்தில் இருந்த இந்த இரண்டு அணிகளும் அமீரகத்தில் தொடர்ச்சியாக 2 தோல்விகளை சந்தித்துள்ளது. இரு அணிகளுமே கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே அணிகளிடம் தான் அடி வாங்கி வந்துள்ளது.

Recommended Video

Ravindra Jadeja Blitzkrieg Helps Chennai Beat Kolkata by 2 Wickets | Oneindia Tamil
பிட்ச் ரிப்போர்ட்

பிட்ச் ரிப்போர்ட்

இன்று நடைபெறும் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். அதே போல மும்பை அணி வெற்றி பெற்றால் மட்டுமே பட்டியலில் முன்னேற முடியும். போட்டி நடைபெறும் துபாய் மைதானமானது பெரிய பவுண்டரி எல்லைகளை கொண்டது. எனவே இங்கு சராசரி ரன்களே 144 தான் ஆகும். எனவே இந்த மைதானத்தில் 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் எனக்கூறப்படுகிறது. இன்று நடைபெறும் இந்த 4 போட்டிகளுமே புள்ளிப்பட்டியலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் ரசிகர்களுக்கு சூப்பர் சண்டேவாக இருக்கப்போகிறது.

Story first published: Sunday, September 26, 2021, 12:25 [IST]
Other articles published on Sep 26, 2021
English summary
Super sunday treat for Cricket Fans, Star teams are ready for action in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X