For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"ஐபிஎல் 2021 போச்சே".. நடவடிக்கையில் இறங்கும் பிசிசிஐ.. விதியை மீறியவர்களுக்கு செக்? - திட்டம் என்ன?

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் விதிகளை மீறிய சில வீரர்களுக்கு எதிராக பிசிசிஐ நடவடிக்கை எடுக்க போவதாக தகவல்கள் வருகின்றன.

2021 ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா கேஸ்களால் மொத்த தொடரும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஐபிஎல்லே வேண்டாம்.. மாலத்தீவிற்கு பறந்த வீரர்கள்.. இனி திரும்ப வாய்ப்பே இல்லை.. பரபர சம்பவம் ஐபிஎல்லே வேண்டாம்.. மாலத்தீவிற்கு பறந்த வீரர்கள்.. இனி திரும்ப வாய்ப்பே இல்லை.. பரபர சம்பவம்

இனி மீதமுள்ள 30 போட்டிகள் எப்போது நடக்கும் என்று அறிவிக்கப்படவில்லை. மீதமுள்ள போட்டிகள் நடக்குமா என்பதே சந்தேகம் ஆகியுள்ளது.

சந்தேகம்

சந்தேகம்

இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் விதிகளை மீறி வீரர்கள் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வருகிறது. இந்த தொடரில் வீரர்களை பாதுகாக்க பயோ பபுள் உருவாக்கப்பட்டது. பயோ பபுளை விட்டு வீரர்கள் வெளியேற கூடாது, மீறி வெளியேறினால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டுமே என்ற விதி இருந்தது.

ஆர்டர்

ஆர்டர்

கொரோனா கேஸ்கள் அதிகரித்த நிலையில் பயோ பபுளில் இருக்கும் வீரர்கள் உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய கூட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இப்படிபட்ட நிலையில் பல வீரர்கள் இந்த பயோ பபுள் விதியை மீறியுள்ளனர். ஹைதராபாத் வீரர் சாகா பயோ பபுளில் இருந்து வெளியேறி மீண்டும் தனிமைப்படுத்தாமல் உள்ளே வந்துள்ளார்.

வீரர்

வீரர்

இன்னொரு பக்கம் டெல்லி வீரர் அமித் மிஸ்ரா கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவி பயோ பபுள் விதியை மீறியுள்ளார். அதேபோல் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி பயோ பபுளை விட்டு வெளியே மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, பின்னர் தனிமைப்படுத்தாமல் உள்ளே வந்து, கொரோனா பாசிட்டிவ் ஆனார்.

தவறு

தவறு

இதெல்லாம் போக சிஎஸ்கே ஊழியர்கள் சிலரும் பயோ பபுள் விதியை மீறி உள்ளனர். இவர்கள் எல்லோரின் மீதும் நடவடிக்கை எடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இவர்கள் எப்படி பயோ பபுளை விட்டு வெளியே சென்றனர். எப்படி விதியை மீறினார்கள், அணி நிர்வாகம் இவர்களை உள்ளே அனுமதித்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளனர். இவர்கள் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, May 5, 2021, 1:34 [IST]
Other articles published on May 5, 2021
English summary
IPL 2021 suspended: BCCI plans to take action against those who breached the bio bubble.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X