என்னங்க இப்படி சொல்றீங்க?.. பிசிசிஐ கொடுத்த மறைமுக சிக்னல்.. அப்போது ஐபிஎல் 2021 நடக்கவே நடக்காதா?

சென்னை: 2021 ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்தாலும் கூட மொத்தமாக இந்த தொடர் நடப்பதே தற்போது சந்தேகம் ஆகியுள்ளது.

திடீரென நிறுத்தப்பட்ட IPL 2021.. நடந்தது என்ன? - முழு விபரம்

இந்தியாவில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எதிர்பார்த்ததை விட இரண்டாம் அலை மிக மோசமாக இருக்கிறது.

மீதமுள்ள 30 போட்டிகள்.. சிக்கிய வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் 2021ல் இனி என்ன நடக்கும்? - பின்னணி

அதிகரித்து வரும் கொரோனா கேஸ்களுக்கு இடையே, 2021 ஐபிஎல் தொடரில் ஆடி வந்த வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த தொடரே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நிறுத்தம்

நிறுத்தம்

இந்த தொடரை மொத்தமாக கைவிடவில்லை. ஆனால் தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. ஆனால் பிசிசிஐ செய்யும் சில விஷயங்களை பார்த்தால் இனி இந்த தொடர் நடப்பதே தற்போது சந்தேகம் ஆகியுள்ளது.

சந்தேகம்

சந்தேகம்

தற்போது பிசிசிஐ எடுத்து இருக்கும் முடிவு ஒன்றுதான் இந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு வீரர்களை சொந்த ஊருக்கு அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மிகவும் பாதுகாப்பாக இவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

பிசிசிஐ முடிவு

பிசிசிஐ முடிவு

இதற்காக சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய போவதாக பிசிசிஐ கூறியுள்ளது. பிசிசிஐ அமைப்பின் இந்த முடிவால் இப்போதைக்கு தொடர் தொடங்காது என்பது உறுதியாகிறது. அதாவது குறைந்தது அடுத்த 2 மாதங்களில் தொடர் தொடங்காது.

போச்சு

போச்சு

அதன்பின் உலகக் கோப்பை டி 20 தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என்று பல தொடர்கள் உள்ளது. ஐபிஎல் 2021 இனி நடக்க தேதிகள் மீதம் இல்லை. பிசிசிஐ ஒரு வருடத்திற்கு 13 மாதங்கள் என்று அறிவித்தால் மட்டுமே இனி போட்டிகளை நடத்த முடியும்.

கைவிடும்?

கைவிடும்?

இதனால் மொத்தமாக ஐபிஎல் கைவிடப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். வீரர்கள் எல்லோரும் திரும்பி செல்வதால் அவர்கள் மீண்டும் வருவது கஷ்டம். பல வெளிநாட்டு வீரர்கள் இந்தியா திரும்ப விரும்ப மாட்டார்கள் என்பதால் இந்த சீசன் இனி நடப்பது சந்தேகம்தான்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021 suspended: The season may not start ever again due to many reasons.
Story first published: Tuesday, May 4, 2021, 15:24 [IST]
Other articles published on May 4, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X