For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது தப்பு.. அவர் எப்படி உள்ளே வரலாம்? மொத்தமாக எதிர்க்கும் 7 அணிகள்.. காரணம் படிக்கல்.. என்ன நடந்தது

சென்னை; தேவ்தத் படிக்கல் கொரோனாவில் இருந்து குணமடைந்த பின் நேரடியாக பெங்களூர் அணிக்குள் சேர்க்கப்பட்டது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் 2021 தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. தினசரி கொரோனா கேஸ்கள் இந்தியாவில் 1.4 லட்சத்தை தாண்டி உள்ளது. ஆனாலும் ஐபிஎல் போட்டிகள் தடையின்றி நடந்து வருகின்றது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சில வீரர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக பெங்களூர் அணியில் கடந்த வாரம் தேவ்தத் படிக்கல் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார்.

தனிமைப்படுத்தப்பட்டார்

தனிமைப்படுத்தப்பட்டார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட படிக்கல் தொடர் சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். ஒரு வாரத்தில் குணமடைந்த படிக்கல் மீண்டும் பெங்களூர் அணியில் இணைந்துள்ளார். பெங்களூர் வீரர்களுடன் படிக்கல் தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

எப்படி

எப்படி

ஆனால் ஐபிஎல் விதிப்படி கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த வீரர் 7 நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கொரோனா குணமானாலும் கூட அந்த வீரர் தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும். ஆனால் படிக்கல் இப்படி 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படவில்லை.

குணம் ஆனார்

குணம் ஆனார்

கொரோனா குணமான மறுநாளே அவர் பெங்களூர் அணியோடு இணைந்துவிட்டார். பெங்களூர் அணியும் இவருக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. இதுதான் தற்போது மற்ற 7 ஐபிஎல் அணிகளை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

விதி

விதி

இவரை எப்படி தனிமைப்படுத்தாமல் மீண்டும் உள்ளே அனுப்ப முடியும். இவரை 7 நாட்கள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் விதிமுறையை மீறி எப்படி இவரை நேராக அணிக்குள் சேர்த்தனர்.

மருத்துவமனை

மருத்துவமனை

இவர் மருத்துவமனையில் இருந்து நேரடியாக வருகிறார். இவரை அணியில் சேர்த்தது தவறு என்று 7 அணிகளும் புகார் வைத்துள்ளன. பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் இது தொடர்பாக பிசிசிஐ அமைப்பிடம் புகார் வைத்ததாக தகவல்கள் வருகின்றன.

Story first published: Saturday, April 10, 2021, 17:01 [IST]
Other articles published on Apr 10, 2021
English summary
IPL 2021: Teams are opposing Devdutt Padikkal for joining RCB team without quarantine
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X