For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓடி வந்த டு பிளசிஸ்.. நேராக சாம் கரனிடம் சொன்ன அந்த வார்த்தை.. இங்குதான் மேட்சே மாறியது.. பின்னணி!

மும்பை: நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற சாம் கரனின் ஓவர் மிக முக்கியமானதாக இருந்தது.

Recommended Video

IPL 2021: ஓடி வந்து அறிவுரை வழங்கிய Du Plessis கொஞ்ச நேரத்தில் Sanju Samson-ஐ காலி செய்த Sam Curran

2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிஎஸ்கே அணி கலக்கிக்கொண்டு இருக்கிறது.

முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் அடுத்த இரண்டு போட்டியில் சிஎஸ்கே வென்றுவிட்டது. ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே 20 ஓவரில் 9 விக்கெட்டிற்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

சிஎஸ்கே வெற்றி

சிஎஸ்கே வெற்றி

இந்த போட்டியில் முதல் 10 ஓவர்களில் சிஎஸ்கே ஆடிய விதம் பெரிய அளவில் அதிர்ச்சி அளித்தது. சிஎஸ்கேவின் பவுலிங்கை முதல் 10 ஓவர்களில் ராஜஸ்தான் அணி வெளுத்து வாங்கியது. அவ்வளவுதான் கதை முடிந்தது, சிஎஸ்கே தோல்வி அடைந்துவிட்டது என்று நினைத்த போதுதான் ஜடேஜா, மொயின் அலி வரிசையாக விக்கெட்டுகளை எடுத்தனர்.

சாம் கரன்

சாம் கரன்

ஆனால் இதற்கு சாம் கரன்தான் வலிமையான அடித்தளம் போட்டுக்கொடுத்தது. சாம் கரன் வீசிய 4வது ஓவரில் மனன் வோஹ்ரா அவுட் ஆனார். அதன்பின் சாம் கரன் சில பவுண்டரிகள் கொடுத்தாலும் பெரிதாக ரன்களை கொடுக்கவில்லை. சாம் கரன் அதன்பின் 6வது ஓவரில் சஞ்சு சாம்சனுக்கு பவுலிங் செய்யும் முன் எப்படி வீசுவது என்று குழப்பத்தில் இருந்தார்.

குழப்பம்

குழப்பம்

அப்போது டு பிளசிஸ் வேகமாக சாம் கரனிடம் வந்து தனது திட்டங்களை குறிப்பிட்டார். ஸ்லோவாக ஷார்ட் பால் வீசும்படி அறிவுரை வழங்கினார். அந்த ஓவரில் இதனால் அடுத்தடுத்து ஸ்லோ ஷார்ட் பந்துகளை மட்டும் சாம் கரன் வீசினார். இதனால் சஞ்சு சாம்சன் கொஞ்சம் திணறினார்.

அவுட்

அவுட்

இதையடுத்து சாம் கரன் தொடர்ந்து இதேபோல் பவுலிங் செய்தார். அப்போது சஞ்சு சாம்சன் அவசரப்பட்டு ஸ்லோ ஷார்ட் பந்து ஒன்றை அடித்தார். இது சரியாக மாட்டாத காரணத்தால் பிராவோ கையில் கேட்சாக தஞ்சம் அடைந்தது. சஞ்சு சாம்சன் இதற்கு முன் இதேபோல் பல முறை அவுட்டாகி இருக்கிறார்.

அவுட் ஆகி இருக்கிறார்

அவுட் ஆகி இருக்கிறார்

இதனால் அதேபோல் பவுலிங் போடும்படி டு பிளசிஸ் அறிவுரை வழங்கி இருக்கலாம் என்கிறார்கள். டு பிளசிஸ் இந்த அறிவுரையைத்தான் குறிப்பிட்டாரா என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் டு பிளசிஸ் பேசிவிட்டு போன அடுத்த சில பந்துகளில் சாம் கரன் இந்த விக்கெட்டை எடுத்து அசத்தினார்.

Story first published: Tuesday, April 20, 2021, 9:21 [IST]
Other articles published on Apr 20, 2021
English summary
IPL 2021: The first two wickets of Sam Curran helped CSK against Rajasthan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X