For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யப்பா சாமி உங்க ஐபிஎல்-லே வேண்டாம்.. ஆளை விடுங்க.. அதிர வைத்த இளம் வீரர்!

லண்டன் : இளம் இங்கிலாந்து வீரர் டாம் பான்டன் மீது கிரிக்கெட் உலகில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அவரது அதிரடி ஆட்டம் அவருக்கு பெரும் புகழ் வெளிச்சத்தை தேடிக் கொடுத்துள்ளது.

ரஹானே உருவாக்கிய 6+5 பார்முலா.. வேறு வழியின்றி விட்டுக்கொடுத்த கோலி.. இந்திய அணியில் செம டிவிஸ்ட்ரஹானே உருவாக்கிய 6+5 பார்முலா.. வேறு வழியின்றி விட்டுக்கொடுத்த கோலி.. இந்திய அணியில் செம டிவிஸ்ட்

ஆனால், அவர் தன்னைத் தேடி வந்துள்ள ஐபிஎல் வாய்ப்பை வேண்டாம் என மறுக்க போவதாக கூறி இருக்கிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2020 ஐபிஎல் தொடரில் டாம் பான்டன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அதே அணியின் இயான் மார்கன் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்களும் இடம் பெற்று இருந்ததால் டாம் பான்டன் இரண்டு போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்றார்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

அந்த இரண்டு போட்டிகளிலும் அவர் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். மற்ற போட்டிகளில் அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோசமாக ஆடிய போதும் அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஏலத்தில் பான்டன்

ஏலத்தில் பான்டன்

அவரை 2021 ஐபிஎல் ஏலத்துக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது. அவரை ஏலத்தில் வாங்க பல அணிகள் போட்டி போடக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஐபிஎல் தொடரே வேண்டாம் என முடிவு எடுக்கப் போவதாகக் கூறி அதிர வைத்துள்ளார்.

ஐபிஎல் வேண்டாம்

ஐபிஎல் வேண்டாம்

தான் ஐபிஎல் தொடரைப் பார்த்து பெரிதும் வியந்து வளர்ந்து இருந்தாலும், தான் பேட்டிங் மற்றும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புகளை இழந்ததாக கூறி உள்ளார். ஐபிஎல் தொடருக்கு பதிலாக இங்கிலாந்து கவுன்டி அணியான சோமர்செட்டில் தான் தொடர்ந்து கிரிக்கெட் ஆடலாமா? என சிந்தித்து வருவதாக கூறி இருக்கிறார்.

Story first published: Thursday, January 28, 2021, 18:43 [IST]
Other articles published on Jan 28, 2021
English summary
IPL 2021 : Tom Banton feels playing count will do more good than warming in IPL bench
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X