For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்த நிலையில், இந்த போட்டியின் மூலம் தனது கணக்கை தொடங்கியுள்ளது.

தோனி போட்ட திட்டம் சொதப்பல்.. நம்பிக்கை உடைந்தது.. ரசிகர்ளுக்கு கோபத்தை தூண்டிய இளம் வீரர்..விவரம்!தோனி போட்ட திட்டம் சொதப்பல்.. நம்பிக்கை உடைந்தது.. ரசிகர்ளுக்கு கோபத்தை தூண்டிய இளம் வீரர்..விவரம்!

சிஎஸ்கே போட்டி

சிஎஸ்கே போட்டி

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹாரின் வேகத்தில் சிக்கி பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுல் (5), மயங்க் அகர்வால் (0), தீபக் ஹூடா (10), நிக்கோலஸ் பூரண் (0) என வெளியேறினர். அதிரடி பேட்ஸ்மேன் கெயில் 10 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இலக்கு

இலக்கு

பின்னர் வந்த வீரர்களில் ஷாருக்கான் மட்டுமே சிறப்பாக ஆடி 47 ரன்கள் அடித்ததால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர் ருத்ராஜ் கெயிக் வாட் 5 ரன்களுக்கு வெளியேறி மீண்டும் சொதப்பினார். ஆனால் அதன் பின்னர் பொறுப்பாக ஆடிய டூப்ளசிஸ் - மொயின் அலி ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

சிறப்பாக ஆடி வந்த மொயின் அலி 46 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். இறுதியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

பெரிய குழப்பம்

பெரிய குழப்பம்

போட்டியின் இடையே டூப்ளசிஸுக்கு நடந்த சம்பவம் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் 14 ஓவரை ரைலே மெரிடித் வீசினார். அவர் வீசிய 5வது பந்து பவுன்சராக சென்று பேட்டிங் செய்த டூப்ளசிஸுன் கிளவுஸில் பட்டு கேட்ச் ஆனது என கள நடுவர் அனில் குமார் சவுத்ரி அவுட் கொடுக்க முடிவெடுத்தார். ஆனால் அந்த ஓவரில் ஏற்கனவே ஒரு ஷார்ட் பால் போடப்பட்டதால் டூப்ளசிஸுக்கு வீசிய பந்து ஷார்ட் பாலா என சோதிக்க 3வது நடுவருக்கு பரிந்துரைத்தார். ஒரு ஓவரில் 2 ஷார்ட் வீசினால் நோ பால் ஆகும். ஆனால் 3வது நடுவர் பந்து கையில் பட்டதா இல்லையா என்று கூட பார்க்காமல் அது பவுன்சர் பந்து இல்லை தோள்பட்டைக்கு கீழ்தான் சென்றது என அவுட் கொடுக்க கூறினார்.

டூப்ளசிஸ் ஏற்படுத்திய வேடிக்கை

டூப்ளசிஸ் ஏற்படுத்திய வேடிக்கை

இதனை சரியாக கவனிக்காத கள நடுவர் நாட் அவுட் கொடுத்தார். பின்னர் மீண்டும் 3வது நடுவர் அவுட் கொடுக்க சொல்ல டூப்ளசிஸுக்கு அவுட் கொடுத்தார். ஆனால் களத்தில் இருந்து வெளியேற மறுத்த டூப்ளசிஸ் தனது கையில் பந்து படவே இல்லை எனக்கூறி டிஆர்எஸ் முறையில் ரிவ்வியூவ் செய்தார். 3வது நடுவரின் அல்ட்ரா எட்ஜ் பரிசோதனையில் அது அவுட் இல்லை என தெரியவந்தது. இதனால் ஆட்டத்தில் சிறிது நேரம் குழப்பம் நீடித்தது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய டூப்ளசிஸ் 36 ரன்கள் எடுத்தார்.

Story first published: Friday, April 16, 2021, 23:23 [IST]
Other articles published on Apr 16, 2021
English summary
Umpire Anil Kumar Chaudhary's Desicion on Du plessis wicket makes Confusion on CSK vs PBKS Match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X