For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எவ்வளவு அவமானம்.. வேதனை.. ஒரே போட்டியில் அடித்து துவைத்த இளம் வீரர்.. பின்னணியில் மாஸ் காரணம்!

மும்பை: நேற்று டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு உனட்கட் முக்கியமான காரணமாக இருந்தது.

Recommended Video

Chris Morris போன ஆட்டம் ZERO இந்த ஆட்டம் HERO தரமான பதிலடி |Oneindia Tamil

நேற்று ராஜஸ்தான், டெல்லி இடையிலான போட்டி விறுவிறுப்பாக சென்றது. கடைசி வரை திரில்லாக சென்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த ஒரு அரைசதத்துக்காக 5 வருஷம் காத்திருக்க வச்சுட்டீங்களே மேக்ஸ்வெல்... ஆர்சிபி நம்பிக்கை வீணாகல! இந்த ஒரு அரைசதத்துக்காக 5 வருஷம் காத்திருக்க வச்சுட்டீங்களே மேக்ஸ்வெல்... ஆர்சிபி நம்பிக்கை வீணாகல!

நேற்று முதலில் களமிறங்கிய டெல்லி அணி 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் 19.4 ஓவரில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது.

சிறப்பு

சிறப்பு

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியில் பவுலிங் செய்த உனட்கட்தான் நேற்று பிளேயர் ஆப் தி மேட்ச் விருது வாங்கினார். இவர் எடுத்த மூன்று விக்கெட்டுகள்தான் மொத்தமாக ஆட்டத்தையே மாற்றியது. தொடக்கத்திலேயே இவர் டெல்லி ஒப்பனர்களை அடுத்தடுத்து விக்கெட் எடுத்து ஆட்டத்தை ராஜஸ்தான் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

விக்கெட்

விக்கெட்

நேற்று தவான், ப்ரித்வி ஷா, ரஹானே என்று மூன்று முக்கியமான வீரர்களின் விக்கெட்டையும் இவர்தான் எடுத்தார். 4 ஓவரில் வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். நேற்று போட்டியில் இவர் சந்தேகமாக இருந்தது. முதல் போட்டியிலேயே உனட்கட்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

வாய்ப்பு

வாய்ப்பு

கடந்த சீசன்களில் உனட்கட் சரியாக பவுலிங் செய்யவில்லை. 3 வருடங்களாக இவர் மோசமாக சொதப்பி வந்தார். 2018ல் 11.50 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியால் எடுக்கப்பட்ட இவர் சரியாக ஆடவில்லை. அந்த தொடரில் 9 ஆர்ஆர் வைத்து இருந்தார். அதன்பின் 2019ல் இவர் 8.40 கோடி ரூபாய்க்கு அதே ராஜஸ்தான் அணியால் எடுக்கப்பட்டார். பின்னர் 2020ல் 3 கோடிக்கு மீண்டும் ராஜஸ்தான் அணியால் எடுக்கப்பட்டார்.

இல்லை

இல்லை

ஒவ்வொரு வருடமும் ராஜஸ்தான் அணியால் இவர் எடுக்கப்பட்டாலும் கூட, பெரிய அளவில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இரண்டு, மூன்று போட்டிகள் சொதப்புவார். அவ்வளவுதான் அதன்பின் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது. இவர் வேஸ்ட், தேவையின்றி இவ்வளவு கோடிகளை பயன்படுத்திவிட்டோம் என்று ராஜஸ்தான் அணி நிர்வாகம் கருதும் அளவிற்கு இவரின் ஆட்டம் இத்தனை வருடம் மோசமாக இருந்தது.

பதிலடி

பதிலடி

ஆனால் நேற்று ஒரே போட்டியில் இந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார். ஒரே போட்டியில் தன்னுடைய மதிப்பை உணர்த்தி உள்ளார். நான் இவ்வளவு கோடிக்கு தகுதியானவன்தான் என்று உனட்கட் நிரூபித்துள்ளார். எல்லா புறக்கணிப்பிற்கும், இணைய கிண்டல்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

எப்படி

எப்படி

நேற்று இவரின் பவுலிங் வித்தியாசமாக இருந்தது. இவர் நேற்று மும்பை பிட்சை நன்றாக பயன்படுத்திக்கொண்டார். பந்து பவுன்ஸ் ஆகிறது, வேகமாக செல்கிறது என்பதை உணர்ந்து கொண்டு பவுலிங் செய்தார். மாஸ் பிளான் போட்டு டெல்லி அணியின் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்

Story first published: Friday, April 16, 2021, 15:22 [IST]
Other articles published on Apr 16, 2021
English summary
IPL 2021: Unatkat excellent bowling helped Rajasthan team to win against Delhi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X