மும்பைக்கு கோலி கொடுக்கும் தலைவலி.. பெரிய பலவீனம்.. ரோகித் எடுக்க போகும் பிரம்மாஸ்திரம்!

மும்பை: ஆர்சிபி கேப்டன் விராட் கோலியின் முடிவு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

14வது ஐபிஎல் தொடர் நாளை தொடங்கவுள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் இந்த சீசனில் விராட் கோலி ஓப்பனிங் இறங்கவுள்ளதாக அறிவித்திருப்பது மும்பை இந்தியன்ஸ் அணி தனி வியூகம் அமைக்கும் அளவிற்கு தலைவலி கொடுத்துள்ளது.

கோலி

கோலி

நாளை நடைபெறும் முதல் போட்டியில் பெங்களூரு - மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இருந்து விராட் கோலி ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கவுள்ளார். இது மும்பை அணிக்கு கடந்த 2016ம் ஆண்டை திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஏனென்றால் அந்த ஆண்டுதான் விராட் கோலி ஓப்பனிங் வீரராக களமிறங்கி ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்களை குவித்த சாதனையை படைத்தார். அவர் அந்த தொடரில் 973 ரன்களை குவித்தார். இதில் 4 சதங்களும் அடங்கும்.

சிறந்த ஓப்பனர்

சிறந்த ஓப்பனர்

கோலி, அணியின் மற்ற இடங்களில் களமிறங்குவதை விட ஓப்பனிங் பேட்ஸ்மனாக அதிக சராசரியை வைத்துள்ளார். கோலிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மனாக 47.96 சராசரியும், மற்ற இடங்களில் 34.0 சராசரியும் உள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் 250 பந்துகளுக்கும் அதிகமாக எதிர்கொண்ட 60 ஓப்பனிங் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் கோலி 3ம் இடத்தில் உள்ளார். முதல் 2 இடங்களில் கே.எல்.ராகுல் 51.2 சராசரியும், ஹசிம் ஆம்லா 48.0 சாசரியுடனும் உள்ளனர்.

ஒரே வாய்ப்பு

ஒரே வாய்ப்பு

விராட் கோலியை சமாளிக்க ரோகித் சர்மாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு பும்ரா - ட்ரெண்ட் போல்ட் ஜோடிதான். வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இதுவரை 3 முறை கோலியை விக்கெட் எடுத்துள்ளார். ட்ரெண்ட் போல்ட் இதுவரை டி20 போட்டிகளில் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்ததில்லை. எனினும் கோலிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் போல்ட் சிறப்பாக பந்துவீசியுள்ளார்.

கோலியின் பலவீனம்

கோலியின் பலவீனம்

ஐபிஎல் போட்டிகளில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம் விராட் கோலி சற்று திணறுவார் என்று கூறலாம். ஏனென்றால் ஐபிஎல் அவர் அதிகபட்சமாக 30 முறை இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம் சரணடைந்துள்ளார். மேலும் கோலி அதிக டாட் பால்களை வைத்ததும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தான். குறிப்பாக இடதுகை வேகப்பந்து வீச்சாளாரின் ஒவ்வொரு 18.27 டெலிவரிக்கும் கோலி அவுட்டாகிறார் என்பது அவரின் பலவீனமாகும். எனவே ட்ரெண்ட் போல்ட்டை ரோகித் சர்மா நிச்சயம் பயன்படுத்த வேண்டும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virat Kohli's big weakness as opener; Can Mumbai Indians exploit that opportunity
Story first published: Thursday, April 8, 2021, 15:14 [IST]
Other articles published on Apr 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X