For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே பற்றவைத்த நெருப்பு.. ஓய்வறையில் வெளுத்து வாங்கிய கோலி.. தலை குனிந்து நின்ற வீரர்கள்!

சார்ஜா: சிஎஸ்கேவுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் ஓய்வறையில் ஆர்சிபி வீரர்களை வார்த்தைகளால் வெளுத்து வாங்கியுள்ளார் விராட் கோலி.

நேற்று நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற வேண்டிய சூழலில் இருந்த போதும், அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் தோல்விக்கு வித்திட்டது.

ஆர்சிபி சொதப்பல்

ஆர்சிபி சொதப்பல்

முதலில் பேட்டிங் செய்த ஆரிசிபி அணியில் கேப்டன் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். கோலி 53 ரன்களும் படிக்கல் 70 ரன்களும் எடுக்க அந்த அணி 13 ஓவர்களில் 100 ரன்களில் இருந்தது. இதனால் நிச்சயம் 180 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் ரன் அடிக்க திணறி இறுதியில் 156 ரன்களை மட்டுமே எடுத்தது.

தோல்வி

தோல்வி

பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கிலும் அந்த அணி பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் சென்னை அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியது. அமீரகத்தில் ஆர்சிபி அணி தொடர்ச்சியாக பெறும் 7வது தோல்வி இதுவாகும். இந்த 7 தோல்விகளுமே இலக்கை நிர்ணயித்து அதனை டிஃபன்ஸ் செய்ய முடியாமல் போனவையே ஆகும்.

கடும் கோபம்

கடும் கோபம்

இந்நிலையில் கோபத்துடன் ஓய்வறைக்கு சென்ற கோலி, அங்கு வீரர்களை வெளுத்து வாங்கியுள்ளார். அப்போது அவர், இன்றைய ஆட்டத்தில் நாம் பெரும் அடி வாங்கியுள்ளோம். மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய தோல்வி இது. இந்தாண்டு தொடரில் புள்ளிப்பட்டியலில் டாப்பில் இருக்க வேண்டும் என முடிவெடுத்தோம். ஆனால் இவ்வளவு கேவலமாக விளையாடினால் எப்படி அது சாத்தியமாகும். இது சரியான ஆட்டம் அல்ல.

எனக்கு பெரும் ஏமாற்றம்

எனக்கு பெரும் ஏமாற்றம்

நேரம் போக போக பிட்ச் ஸ்லோவாக இருந்தது தான். அதற்காக ரன் ஏதும் அடிக்காமல் இருப்பதா?. 15 - 20 ஓவர்களில் நாம் மோசமான ரன்னை எடுத்திருக்கிறோம். 175 ரன்கள் இலக்காக வைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அதற்கு அருகில் கூட செல்லவில்லை. பந்துவீச்சிலும் நிலையான செயல்பாடு இல்லை. ஒரு நம்பிக்கையே இன்றி பந்துவீசினீர்கள். உங்களது பந்துவீச்சில் நான் ஏமாற்றமடைந்துள்ளேன்.

பவுலிங்

பவுலிங்

சிஎஸ்கேவின் பவுலிங் மற்றும் பேட்டிங் அட்டகாசமாக இருந்தது. ஸ்லோவர் மற்றும் யார்க்கர்களில் திறம்பட செயல்பட்டனர். பேட்டிங்கில் அவர்கள் எந்தெந்த இடங்களில் ரன்களை அடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என திட்டம் வகுத்தோம். ஆனால் அதனை துளி அளவு கூட நாம் சரியாக செய்யவில்லை. கடைசி 5 - 6 ஓவர்கள் எதுவுமே சரியில்லை என கோலி புலம்பி தள்ளியுள்ளார்.

Story first published: Saturday, September 25, 2021, 22:29 [IST]
Other articles published on Sep 25, 2021
English summary
Virat Kohli Scolds RCB Teamates in Dressing Room, after the deafeat agaings CSK in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X