ஐபிஎல்-லும் கேப்டன் பதவியை துறந்த கோலி.. ஆர்சிபி ரசிகர்கள் சோகம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அமீரகம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலும் விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார்.

IPL 2021 உடன் RCB அணியின் Captain பதவியில் இருந்து விலக Virat Kohli முடிவு

விளையாட்டு துறை மற்றும் சமூக வலைதளங்கள் முழுவதும் விராட் கோலியின் கேப்டன்சி குறித்த பேச்சுதான் சூடுபிடித்து வருகிறது.

 IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி - IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி -

இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

கோலி பதவி விலகல்

கோலி பதவி விலகல்

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக விராட் கோலி இருந்து வந்தாலும், அவரால் இந்தியாவுக்காக ஒரு ஐசிசி கோப்பையை கூட பெற்றுக்கொடுக்க முடியவில்லை. சாம்பியன்ஸ் டிராபி, 50 ஓவர் உலகக்கோப்பை தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என முக்கிய கட்டங்களில் கோலியின் கேப்டன்சி சொதப்பிவிடுகிறது. இதன் காரணமாக வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளார்.

பாராட்டு

பாராட்டு

விராட் கோலியின் இந்த முடிவு குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். எந்தவித சுயநல எண்ணமும் இன்றி கேப்டன் பதவியை துறந்துள்ளார் என புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார்.

ஐபிஎல்-லும் சிக்கல்

ஐபிஎல்-லும் சிக்கல்

ஐசிசி கோப்பைகளை போன்றே ஐபிஎல் கோப்பையையும் விராட் கோலி தலைமை தாங்கும் ஆர்சிபி அணி ஒரு முறை கூட வென்றதில்லை. ஒவ்வொரு முறையும் வெற்றிகளை குவித்த போதும், முக்கியமான ப்ளே ஆஃப் சுற்றுகளின் போது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணி வெளியேறிவிடுகிறது. எனவே கோப்பையை வென்று கொடுக்க முடியாததால் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் கோலி விலகியுள்ளார்.

கோலி விளக்கம்

இதுகுறித்து ஆர்சிபி வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள கோலி, ஆர்சிபி அணிக்காக நான் நீண்ட வருடமாக விளையாடி வருகிறேன். இந்த வருடம் தான் நான் கேப்டனாக இருக்க போகும் கடைசி தொடராகும். ஆனால் ஐபிஎல்-ல் எனது கடைசி ஆட்டம் வரை ஆர்சிபி அணிக்காகவே நான் விளையாடுவேன். எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள், எனது பயணம் தொடரும் என கோலி கூறியுள்ளார்.

நம்பிக்கை

நம்பிக்கை

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி எப்போதும் இல்லாத அளவிற்கு மிகச்சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. வழக்கமாக பந்துவீச்சில் சொதப்பு அந்த அணி இந்த முறை பலமான பந்துவீச்சு படையுடன் உள்ளது. இதன் காரணமாக இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது. இந்தாண்டு நிச்சயம் கோப்பையை வென்றுவிடும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளது.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 கணிப்புகள்
Match 5 - October 19 2021, 03:30 PM
ஸ்காட்லாந்து
பாபுவா நியூ கினி
Predict Now
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: Virat will Step down as RCB captaincy at the end of this season
Story first published: Sunday, September 19, 2021, 22:49 [IST]
Other articles published on Sep 19, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X