For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவருக்கு என்ன மரியாதை... ரகசிய குறியீட்டால் தான் வென்றதா கொல்கத்தா அணி. சேவாக் கடும் காட்டம்!

சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி ரகசிய குறியீடுகளை பயன்படுத்தியதற்கு முன்னாள் வீரர் சேவாக் கடும் காட்டம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

IPL 2021: KKR uses secret code for PBKS match | OneIndia Tamil

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அடேங்கப்பா இவ்ளோ பெருசாவா கேக்குறது... நாடு திரும்ப ஆஸ்திரேலிய வீரர் வைத்த கோரிக்கை.. ஏற்கப்படுமா? அடேங்கப்பா இவ்ளோ பெருசாவா கேக்குறது... நாடு திரும்ப ஆஸ்திரேலிய வீரர் வைத்த கோரிக்கை.. ஏற்கப்படுமா?

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 123/9 ரன்களே எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா அனி 16.4 ஓவர்களில் 126/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

குறியீடு

குறியீடு

பஞ்சாப் கிங்ஸ் அணியில் கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில், நிக்கோலஸ் பூரண் போன்ற பவர் ஹிட்டர்ஸ் இருந்த போதும் கொல்கத்தா அணி சாதூர்யமான பந்துவீச்சால் 123 ரன்களுக்கு சுருட்டியது. இந்த சிறப்பான பந்துவீச்சிற்கு களத்திற்கு வெளியில் இருந்து பயிற்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் ரகசிய குறியீடுகள் அனுப்பியதே காரணமாக பார்க்கப்படுகிறது.

எதற்காக?

எதற்காக?

கொல்கத்தா பவுலிங் செய்த போது, களத்திற்கு வெளியில் அந்த அணியின் பெவிலியனில் 54 என்ற எண் ஒட்டப்பட்டிருந்த போர்ட் வைக்கப்பட்டிருந்தது. இது எந்த பவுலருக்கு வாய்ப்பு தரவேண்டும், எப்படிப்பட்ட ஃபீல்டிங்கை நிற்க வைக்க வேண்டும் என்பதை கேப்டனுக்கு உணர்த்தவே ரகசிய குறியீடு போன்று ஒட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

 சேவாக் காட்டம்

சேவாக் காட்டம்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சேவாக், இதுபோன்ற குறியீடுகளை நாம் ராணுவத்தில் தான் பார்த்திருப்போம். அது கொல்கத்தா அணியில் எந்த நேரத்தில் ஒரு பவுலரைப் பயன்படுத்த வேண்டிய திட்டம் என்று நினைக்கிறேன். இது கேப்டன் மோர்கனுக்கு பயிற்சியாளர் செய்த சிறிய உதவியாகும். இது போன்று செய்வதில் தவறில்லை, ஆனால் வெளியிலிருந்து போட்டியை இவர்கள் கட்டுப்படுத்தினால் யார் வேண்டுமானாலும் கேப்டனாக இருக்கலாமே? களத்தில் கேப்டனாக இருக்கும் இயான் மோர்கனின் முடிவுகளுக்கு என்ன மரியாதை.

அதில் தவறு இல்லை

அதில் தவறு இல்லை

நான் வெளியில் இருந்து உதவி பெறக்கூடாது எனக்கூறவில்லை. கண்டிப்பாக களத்திற்கு வெளியில் இருந்து உதவி பெற வேண்டும். சில சமயங்களில் 25வது வீரர் கூட நல்ல யோசனையை வழங்கலாம். ஆனால் ஒரு கேப்டனுக்கு எந்த சமயத்தில் எந்த பவுலரை பயன்படுத்த வேண்டும் என்ற உள்ளுணர்வு இருக்க வேண்டும். கேப்டன் தான் வகுத்த வியூகத்தை மறந்துவிட்டால் இதுபோன்ற குறியீடுகளை கொண்டு அவர்களுக்கு நியாபகப்படுத்துவதற்கு மட்டுமே பயன்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, April 27, 2021, 14:14 [IST]
Other articles published on Apr 27, 2021
English summary
Virender Sehwag’s respond on KKR uses secret code on PBKS match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X