For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த ப்ளேயர மட்டும் ஆட விடுங்க.. ஆர்சிபி ஃபார்முக்கு வரும்.. கோலிக்கு முக்கிய டிப்ஸ் கூறிய சேவாக்!

அகமதாபாத்: ஆர்சிபி அணி வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்றால் ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது.

அவர மாறி காசுக்காக அத பண்ணமாட்ட.. அக்‌ஷய் குமார் குறித்து ஹர்பிரீத் கடும் சாடல்.. ஏன் இந்த கோபம்! அவர மாறி காசுக்காக அத பண்ணமாட்ட.. அக்‌ஷய் குமார் குறித்து ஹர்பிரீத் கடும் சாடல்.. ஏன் இந்த கோபம்!

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 179/5 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆர்சிபி 20 ஓவர்களில் 145/8 மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

திணறல்

திணறல்

இந்த தொடரில் சிறப்பாக ஆடி வந்த ஆர்சிபி அணி தனது 2வது தோல்வியை சந்தித்துள்ளது. இந்த இரண்டு போட்டியிலுமே பேட்டிங்கில் சிறப்பாக அமையாததே தோல்விக்கு காரணமாக அமைந்தது. நேற்றைய போட்டியில் தேவ்தத் பட்டிக்கல் 7 ரன்களுக்கு வெளியேற விராட் கோலி மற்றும் ராஜட் பட்டிடர் ஆகியோர் அதிரடி காட்ட திணறினர். மிடில் ஆர்டரில் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் ஆகியோரும் சோபிக்க தவறினர்.

மாற்றம்

மாற்றம்

இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஓப்பனிங்கில் மாற்றம் செய்ய வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், விராட் கோலி பேட்டிங் வரிசையில் மீண்டும் 3வது இடத்திற்கே வரவேண்டும். ராஜட் பட்டிடரை நீக்கிவிட்டு இளம் வீரர் முகமது அசாரூதினுக்கு ஓப்பனிங் களமிறங்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். 3வது இடத்தில் கோலி, அடுத்து மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் ஆகியோர் களமிறங்குவதே சிறப்பாக இருக்கும்.

அட்வைஸ்

அட்வைஸ்

ஆர்சிபி அணியின் மிடில் ஆர்டரில் 3 உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இடம் பெற்றிருந்தால் சிறப்பாக இருக்கும். தேவ்தத் பட்டிக்கல் மற்றும் அசாரூதின் டாப் ஆர்டரில் தங்களது பணியை செய்தால், விராட் கோலி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் பிரஷரை சரிசெய்து மிடில் ஆர்டரில் ரன் உயர்த்துவார்கள் என தெரிவித்துள்ளார்.

முகமது அசாருதீன்

முகமது அசாருதீன்

தற்போது 3வது இடத்தில் ஆடி வரும் பட்டிடார் 4 போட்டிகளில் விளையாடி 71 ரன்களே எடுத்துள்ளார். நேற்றைய போட்டி அதிகபட்சமாக 30 பந்துகளில் 31 ரன்கள் அடித்தார். ஆனால் இதுவரை வாய்ப்பு பெறாத முகமது அசாரூதின் கடந்த சையது முஷ்டக் அலி கோப்பையில் 37 பந்துகளில் சதமடித்து அனைவரையும் வியக்க வைத்தவர். அவரை இந்தாண்டு ஆர்சிபி அணி ஆரம்பத்தொகையான ரூ.20 லட்சத்திற்கு வாங்கியது.

Story first published: Sunday, May 2, 2021, 13:13 [IST]
Other articles published on May 2, 2021
English summary
Virender Sehwag thinks RCB should change their Opening pair in upcoming matches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X