அவரை அனுப்ப முடியாது.. பதறியடித்த வார்னர்.. நடராஜனை விடுவதற்கு மறுத்த ஹைதராபாத்.. என்ன நடந்தது?

ஹைதராபாத்: நடராஜனின் உடல்நிலை குறித்து ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் முக்கியமான விவரங்களை பகிர்ந்துள்ளார்.

ஹைதராபாத் அணியில் கடந்த இரண்டு போட்டிகளாக நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதற்கு முன் இரண்டு போட்டிகளில் நடராஜன் நன்றாக பவுலிங் செய்தார்.

இரண்டு போட்டிகளில் ஆடி மொத்தம் 2 விக்கெட்டுகளை எடுத்தார். ஆனாலும் இவருக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்படாமல், கலீல் அகமது அணியில் எடுக்கப்பட்டார்.

விவரம்

விவரம்

இந்த நிலையில் நடராஜனின் உடல்நிலை குறித்து பேசிய வார்னர், நடராஜனுக்கு காலில் காயம் உள்ளது. அதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நடராஜன் மொத்தமாக குணமடைந்த பின் அவர் அணியில் இணைவார். மற்றபடி அவரின் ஆட்டத்தில் பிரச்சனை இல்லை என்று வார்னர் குறிப்பிட்டுள்ளார்.

வார்னர்

வார்னர்

இந்த நிலையில் நடராஜன் மருத்துவமனையில் இதுவரை சோதனை மேற்கொள்ளவில்லை. ஹைதராபாத் அணிதான் இவரை டெஸ்ட் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. இவரின் காலில் லேசான காயம்தான் உள்ளது.

ஸ்கேன்

ஸ்கேன்

இந்த காயத்திற்காக இவர் மருத்துவமனை சென்றால் பின்னர் 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். 7 நாட்கள் தனிமையில் இருந்தால்தான் மீண்டும் அணியில் இணைய முடியும். நடராஜனை இப்படி பபுளை விட்டு அனுப்பி முடியாது என்று வார்னர் கூறியுள்ளார்.

வார்னர் விருப்பம்

வார்னர் விருப்பம்

நடராஜன் பபுளில் இருந்து போனால் அணிக்கு சிக்கலாகும் என்று வார்னர் பதறி உள்ளார். இதனால் அனுப்ப மறுத்துள்ளனர். இதனால் அணியின் பிசியோவை வைத்தே நடராஜனுக்கு தொடர்ந்து சிகிச்சைகளை அளித்து வருகிறார்கள். இன்னும் 2 போட்டிகளில் இதனால் நடராஜன் ஆடுவது சந்தேகம்தான் என்கிறார்கள்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: Warner does not want Natarajan to leave the Bio Bubble for scan
Story first published: Thursday, April 22, 2021, 12:04 [IST]
Other articles published on Apr 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X